Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சளியை போக்கும் மருத்துவ குணங்களை கொண்ட தும்பை சாறு !!

Webdunia
தும்பைப் பூவையும், பெருங்காயத்தையிம் அரைத்துக் கடுகெண்ணெய்யில் கலந்து காய்ச்சி வடித்து வைத்ததுக் கொண்டு சொட்டு மருந்தாகக் காதிற்கு விட்டு வரக் காதில் சீழ்வடிதல் குணமாகும்.

தும்பைச் சாற்றைத் தேனில் கலந்து சுட வைத்துக் குழந்தைகளுக்குப் புகட்ட இசிவு நீங்கும்.
 
தும்பைச்சாறு 200 மி.லி. கழுதை மூத்திரம் 100 மி.லி. பசுநெய் 200 மி.லி. கலந்து காய்ச்சி மெழுகு பதத்தில் வடித்து உச்சிக் கரண்டியளவு உள்ளுக்குக் கொடுத்து, வெளியிலும் பூசிவரக் கிராந்தி புண் குணமாகும்.
 
தும்பை இலைச்சாறு 10 மி.லி. எலுமிச்சம் பழச்சாறு 10 மி.லி. வெங்காயச்சாறு 5 மி.லி. எண்ணெய் 5 மி.லி. கலந்து காலையில் வெறும் வயிற்றில் கொடுத்து வரப்  பெரும்பாடு நீஙுகும்.
 
தும்பை இலை, உத்தாமணி இலை சம அளவு எடுத்து அரைத்துக் கோலிக் காயளவு பசும்பாலில் கொடுத்து வர மாத விலக்கினால் ஏற்படும் குறைபாடுகள் நீங்கும்.
 
தும்பைப் பூவை வெள்ளாட்டுப் பாலில் கலந்து காயச்சி வடிகட்டிப் பாலைமட்டும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து நாற்பது நாள் கொடுத்துவரக் கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
 
தும்பைப் பூவையும், ஒருமிளகையும் அரைத்து நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி, தலைபாரம், நீர்க்கோர்வை நீங்கும்.
 
தும்பைச் சாற்றையும்,பழச்சாற்றையும் சம அளவு எடுத்துக் கலந்து கொடுத்து வர ஆனந்த வாயு தீரும்.
 
கழுதைத்தும்பை வேரை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூச அரையாப்பு குணமாகும்.
 
தும்பைச் சாற்றைக் கண், காது, மூக்கில் நசியமாய்ப் பயன்படுத்தி உள்ளுக்கும் கொடுத்துக் கடிவாயிலும் பூசப் பாம்புக் கடி நஞ்சு தீரும்.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments