Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வலிப்பு நோய் மற்றும் பல நோய்களை குணப்படுத்தும் வெள்ளை பூசணிக்காய்!!

வலிப்பு நோய் மற்றும் பல நோய்களை குணப்படுத்தும் வெள்ளை பூசணிக்காய்!!
பூசணியின் விதைகள் குடல் புழுக்களை அழிக்கும் தன்மையைப் பெற்றுள்ளன. தோல் நீக்காமல் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து இந்த விதைகளைச் சாப்பிட வேண்டும். இதன் மூலம் குடலில் உள்ள எல்லா வகையான புழுக்களும் அகன்றுவிடும். இந்த விதையில் உள்ள பழுப்பு நிற எண்ணெயும் மருத்துவக் குணம் நிரம்பியது.

 
வெள்ளை பூசணிக்காய் வலிப்பு நோய், தலைப்பேன்கள், சிறுநீர் பிரியாமை முதலியவற்றைக் குணப்படுத்திவிடுகிறது. முடி நன்கு வளரவும், தலையில் பேன்கள் குடியேறாமல் இருக்கவும், வறண்ட முடிகள் எண்ணெய்ப் பசையுடன் காட்சியளிக்க பின் வருமாறு செய்ய வேண்டும். 
 
பூசணியின் தோலையும், விதைகளையும் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி இறக்கி வைத்துக் கொள்ளவும். தினமும் இந்த எண்ணெயைத் தலையில் தேய்த்தால் போதும், பலன் கிடைக்கும்.
 
1 கிராம் பூசணியில் கிடைக்கும் கலோரி 15 தான். இதனால் நீரிழிவு நோயாளிகளும், உடல் பருத்த ஊளைச் சதை நோயாளிகளும் இதைச் சமைத்து உண்ணலாம். உடல் பருக்காது, உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியையும் தருகிறது. சிறுநீர் நன்கு பிரிய உறுப்புகளைத் தூண்டுகிறது. பாலுணர்ச்சியைத் தூண்டுகிறது. தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தை ஏற்படுத்திவிடுகிறது. திடீர் திடீர் என்று ஏற்படும் வலிப்பு நோய்களையும் குணமாக்கிவிடுகிறது.
 
பூசணியின் சதையை மட்டும் எடுத்துக் கொதிக்கும் தண்ணீரில் சிறுசிறு துண்டுகளாய் நறுக்கிப் போடவும். ஆறியதும் இரு தேக்கரண்டி சர்பத் சேர்த்து அருந்தவும். இது முக்கியமான மருந்தாகும். இதயம் பலகீனமாய் உள்ளவர்கள், இரத்த சோகை நோயாளிகள், புற்றுநோயாளிகள், உடல் உடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள் இந்த மருந்தை தினமும் (ஒருவேளை) தயாரித்து அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
 
மேலும், உடலின் வெப்பம் தணியவும், ஆணின் உயிரணுக்கள் அடர்த்தியுடன் வெளிப்படவும் இந்த மருந்தை அருந்த வேண்டும். இரத்தத்தை உறையச் செய்வதில் வெள்ளை பூசணி முக்கிய இடத்தை வகிக்கிறது.
 
பூசணியின் சதையை மட்டும் எடுத்து வெயிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். பிறகு, அதை இடித்துப் பொடிபோலச் சாப்பிட்டால் இரத்த வாந்தி, கோழை முதலியன குணமாகும்.
 
மூலம், சிறுநீர் ஆகியவற்றில் வரும் இரத்தம், நுரையீரல்கள் மற்றும் மூக்கு வழியாக வரும் இரத்தம் முதலியவற்றை இறுகி உறையச் செய்ய முடியும். இதற்காகத் தோல் நீக்கிய பூசணிக்காய்த் துண்டுகளை மிக்ஸி மூலம் சாறாக மாற்றி, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து அருந்தினால் போதும். இரண்டு மூன்று முறை இவ்வாறு அருந்தியதுமே இரத்தம் உறைந்து விடும். இரத்த வாந்தியின் போதும் இந்த முறையில் அருந்தலாம்.
 
சிறுநீர் நன்கு பிரியவும், உடலில் உள்ள கழிவுகள் வெளியேறவும் பூசணிக்காயை உணவில் சேர்ப்பது நலம். பூசணிக் கொடியின் இளந்தளிர் இலைகளுக்கும் இதே மருத்துவக் குணங்கள் உள்ளன.
 
பூசணியைப் பிழிய வேண்டும். சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அழுத்தினால் போதும். அதில் கிடைக்கும் சாற்றுடன் அதே அளவு தண்ணீர் சேர்த்து அருந்த வேண்டும். தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் வயிற்றுப் புண் முற்றிலும் குணமாகும்.
 
பூசணிக்காயின் விதைகளை அகற்றிவிட்டுச் சதையை மட்டும் வேக வைக்க வேண்டும். புண்களின்மீது இந்தச் சதையை நன்கு பிசைந்து வைத்துக் கட்ட வேண்டும். புண்களினால் ஏற்படும் கெட்ட நாற்றம் நீங்கி, புண்கள் குணமாகும்.
 
வெள்ளை பூசணியில் சிறிதளவே புரதம், மாவுபொருள்கள் ஆகியன உள்ளன. ஆனால் அதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியனவும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ‘பி’ குரூப் வைட்டமின்களும், ‘சி’ வைட்டமினும் தக்க அளவில் உள்ளன. இதனால்தான் இதயம் பலம் பெறுகிறது. நரம்புக் கோளாறுகளும் குணமாகின்றன. மலச்சிக்கல் இன்றி நலமுடன் வாழ வேண்டும் என்னும் ஒரே நோக்கத்தில் அவ்வப்பொழுது பூசணிக்காய் சாப்பிட்டால் நலம் பெறுவார்கள் என்பது உறுதி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாதுஷா செய்ய இதை படிச்ச போதும்.....