Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் உண்டாகும் நன்மைகள்...!!

Webdunia
100கிராம் புடலங்காயில் 94 சதவிகிதம் உணவாகும் பகுதி ஆகும். 92.9 கிராம் நீர்ச்சத்து உடையது. புரோட்டீன் 0.5 கிராமும், கொழுப்புச்த்து 0.3 கிராமும், போலேட் 15  மைக்ரோகிராமும், விட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளன.

டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்தது. எடை அதிகரிக்காமலும் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்க உதவுகிறது. காய்ச்சல் உள்ளவர்கள்  புடலங்காயைக் கொதிக்க வைத்த டிகா‌ஷனை கொடுத்தால் ஒரே இரவில் காய்ச்சல் தணிந்து, உடல்நலம் இயற்கையாக சீராகத் தொடங்கும்.
 
புடலங்காய் ஓர் சர்க்கரை நோய்க்கான மருந்தாகிறது. வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்ற வல்லது, மாரடைப்பைத் தடுக்க வல்லது. கருத்தடைக்கு உதவுவது,  பால்வினை நோயான எச்.ஐவிக்கு எதிரானது.
 
புடலங்காயில் ஆல்கலாய்ட்ஸ், கிளைகோஸைட்ஸ், டேனின்ஸ் ப்ளேவனாய்ட்ஸ், பெனால்ஸ் மற்றும் ஸ்டிரால்ஸ் ஆகிய மருத்துவ வேதிப்பொருட்கள்  மிகுந்துள்ளன.
 
விட்டுவிட்டு காய்ச்சல் தொடரும் போது அடிக்கடி புடலங்காயை இளசாக வாங்கி கொட்டைகளை நீக்கி விட்டு கறியாக சமைத்து சாப்பிடுவதால் காய்ச்சல்  மறைந்து போகும்.
 
புடலங்காய் இதயத்துக்கு பலமும் நல்ல செயல்பாட்டையும் தரக்கூடியது. அதிக உடலுழைப்பு, பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றால்  இதயத்துடிப்பும், பெருமூச்சும் ஏற்பட்டு இதயம் பலவீனமடைவது இயற்கையாகும்.
 
இதய நோயாளிகள் 48 நாட்கள் சாப்பிடுவதால் நலம் பெறுவர். புடலங்காயின் இலைச்சாறு 5 முதல் 10மி.லி அளவுக்கு உள்ளுக்குப் புகட்டுவதால் பேதியாகும் வாந்தி எடுக்க வைக்கவும் மருந்தாகும்.
 
புடலஞ்செடியின் இளம் இலைகளைச் சேகரித்து சுத்திகரித்து அரைத்துப் பிழிந்த சாற்றில் அன்றாடம் காலையில் 30மி.லி வரை குடித்து வருவதால் இளம்  வழுக்கைத் தலையிலும் புழுவெட்டால் ஏற்பட்ட திட்டுத் திட்டான வழுக்கையும் நாளடைவில் மாறி தலைமுடி வளரும்.
 
அதிக நீர்ச்சத்துள்ள காரணத்தினால், உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது இது. வெயில் நாட்களில் புடலங்காயை உண்பதன் மூலம் வெம்மையின்  பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். இதிலுள்ள அதிகப்படியான தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கரோட்டீன்கள் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக்  காக்கக்கூடியவை. பொடுகைப் போக்கும் குணமும் இதற்கு உண்டு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments