Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலுக்கு தேவையான முக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ள முருங்கை கீரை !!

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (12:13 IST)
முருங்கைக்கீரை ஒரு மருத்துவகுணம் மிக்க மூலிகை. மற்ற கீரை வகைகளை விட அதிக அளவு புரதச்சத்தும், மற்ற சத்துகளும் முருங்கை கீரையில் நிறைந்துள்ளன.


முருங்கைக் கீரையில் உடலுக்குத் தேவையான முக்கியமான 9 அமினோ அமிலங்கள் உள்ளன.

முருங்கைக்கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் முருங்கைக்கீரை உண்டால் நீங்கும்.

முருங்கைக் கீரையில் மற்ற தாவர உணவுகளில் இருப்பதைவிட 25 மடங்கு இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது.

மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு முருங்கைக்கீரை சிறந்த மருந்தாக பயன்படுகிறது.  முருங்கைக்கீரையை சூப் போல செய்து சாப்பிட்டால் மூட்டு வலி பறந்து போய்விடும்.

முருங்கைக்கீரையை வாரத்தில் குறைந்தது ஒருமுறையாவது உணவுடன் எடுத்து கொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும்.

முருங்கைக்கீரையானது கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவித்து பிரசவத்தை விரைவுபடுத்தும். முருங்கை கீரையை கொண்டு தயாரிக்கப்படும் உணவுவானது தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

முருங்கைக்கீரை சூப்பானது ஆஸ்துமா, மார்பு சளி போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு  நல்லது. முருங்கைகீரையானது ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை போக்கும் வல்லமை வாய்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுண்டல் அவித்து சாப்பிடுவதால் கிடைக்கும் வைட்டமின்கள்.. ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்..!

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் என்னென்ன?

பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

தக்காளியில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

முழங்கால் செயற்கை தசைநார் சிகிச்சை! தமிழகத்தில் முதலிடம்! – ரெலா மருத்துவமனை!

அடுத்த கட்டுரையில்
Show comments