Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏராளமான நன்மைகளை தரும் முருங்கை இலை பொடி !!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (14:36 IST)
முருங்கையின் காய்கள், வேர்கள், பட்டை, மலர்கள், விதைகள், பட்டை, மலர்கள், விதைகள் அனைத்தும் மருத்துவ குணம் மிகுந்தவை.


முருங்கை பவுடர் அல்லது பொடி என்பது முருங்கை மரத்தின் இலைகளை உலர வைத்து தயாரிக்கப்படுகிறது. இந்த பொடியை கொண்டு நாம் எண்ணற்ற நன்மைகளை பெற முடியும்.

முருங்கை இலையில் விட்டமின் ஏ, சி, தயமின் பி1, ரிபோஃப்ளேவின், நியசின், போலேட், மக்னீசியம், இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் ஜிங்க் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன.

முருங்கை பொடியில் பல ஊட்ட சத்துக்கள் உள்ளடக்கியது. முருங்கையில் அதிகளவு விட்டமின்களும், மினரல் மற்றும் அமினோ ஆக்ஸிடண்டுகள் உள்ளன.

முருங்கை இலை பவுடரில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள், செல்களில் ஏற்படும் சேதம், மன அழுத்தம், வீக்கங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துகின்றன. உடலில் உள்ள உயிரணுக்கள் சேதமாவதை தடுக்கவும் இது உதவுகிறது.

முருங்கை இலையின் பொடியானது பல்வேறு அழற்சிகளில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது. குறிப்பாக நீரிழிவு, இதய நோய், ஆர்த்தரிட்டிஸ், உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது.

சர்க்கரை நோய் அறிகுறிகள் இது உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் குளோக்கோஸை குறைக்கிறது. இது உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இது உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைத்து, சர்க்கரை நோய் அறிகுறிகளில் இருந்து காப்பாற்றும்.

முருங்கை இலையின் பொடி மற்றும் பூக்கள் கல்லீரல் பாதுகாப்பிற்கும் உதவுகிறது. இது கல்லீரலில் ஏற்படும் விஷத்தன்மை, நச்சுத்தன்மை, மற்றும் சேதம் ஆகியவற்றை தடுக்க உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

திராட்சை பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments