Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலில் உள்ள நச்சுக்களை முறித்து வெளியேற்றும் தன்மை கொண்ட சுக்கு !!

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (18:24 IST)
இஞ்சியை நன்றாக காயவைத்த பின், அதில் உள்ள நீர் வற்றிய நிலையில் இருப்பது தான் சுக்கு. சுக்கு எளிதில் கெடாது. ஆனால் ஆரோக்கியத்திற்கு தேவையான நன்மைகள் அனைத்தும் இதில் உள்ளது.


ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சுக்குத் தூள் போட்டு நன்றாக கொதிக்கவைத்து, அதை வடிகட்டி, தேன் கலந்து தினமும் பருகி வந்தால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், மூட்டு வலி குணமாகும்.

உடல் எடையைக் குறைக்க சுக்கு மிகவும் உதவுகிறது. ஒரு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் சுக்கு பொடியை கலந்து வெதுவெதுப்பாக சூடுபடுத்தி அதில் தேன் சேர்த்து, அதனை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள தெர்மோஜெனிக் ஏஜென்ட், கொழுப்புக்களை கரைத்து, தொப்பையின் அளவை குறைத்து, உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

வெதுவெதுப்பான பாலில் சுக்கு பொடியை சேர்த்து, அதில் நாட்டுச் சர்க்கரைக் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக நோய் தொற்று குணமாகும்.

வயிற்றில் எரிச்சல் ஏற்படும்பொழுது, அதனை சரிசெய்ய, கரும்பு சாறுடன் சிறிதளவு சுக்கு பொடியை சேர்த்து, தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், வயிற்றுப் பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

சுக்கு எந்த வகையான உணவையும் செரிமானம் அடைய செய்துவிடும். உடலில் உள்ள நச்சுக்களை முறித்து வெளியேற்றும். குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தமாக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

`அல்சைமர்' எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments