Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் எடையை குறைக்க உதவுமா சுக்கு...?

Webdunia
இஞ்சியை நன்கு காய வைத்து பொடி செய்தால் வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த பொடி (சுக்கு) நன்கு மணமாக இருக்கும். இதனை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு இறுக்கமாக மூடி வைத்தால், ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம்.

வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டால், அதனை சரிசெய்ய, கரும்பு ஜூஸில் சுக்கு பொடியை சேர்த்து கலந்து, தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், வயிற்றுப்  பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
 
தலைவலி வரும் போது, அதில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க, சுக்கு பொடியில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, நெற்றியில் தடவ வேண்டும். இதேப்போல் தொண்டை வலி வந்தால், தொண்டையில் தடவுங்கள்.
 
உடல் எடையைக் குறைக்க சுக்கு மிகவும் சிறப்பான உணவுப் பொருள். அதற்கு 1/2 டீஸ்பூன் சுக்கு பொடியை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தேன்  சேர்த்து, அதனை தினமும் குடித்து வந்தால், உடல் எடையை பிட்டாக வைத்துக் கொள்ள உதவும்.
 
சுடுநீரில் ப்ளாக் உப்பு, சுக்கு பொடி மற்றும் சிறிது பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து குடித்தால், வயிற்று உப்புசம் நீங்கும்.
 
ஒரு பாத்திரத்தி 4-5 டேபிள் ஸ்பூன் சுக்கு பொடியை போட்டு, அதில் ஒரு ஜார் நீரை ஊற்றி கொதிக்க விட்டு வடிகட்டி, தினமும் தேன் சேர்த்து குடித்து வந்தால்,  மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் அங்குள்ள வீக்கம் குறைந்து, உடனடி நிவாரணம் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

வெறுங்காலுடன் வாக்கிங் செல்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments