Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை நீக்குமா பாகற்காய்...?

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (15:12 IST)
நீரழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற்காயில் உள்ள ஒரு வகை வேதிப் பொருள் இன்சுலின் போல் செயல்பட்டு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது.

பாகற்காயை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் நீக்கப்படுகிறது. பாகற்காயானது செரிமானத்திற்கு சிறந்தது.
 
பாகற்காய் செரிமான பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கள் இருந்து விடுவிக்கும். பாகற்காயானது உடலின் செரிமான மண்டலத்தை நன்றாக தூண்டுகிறது. இதனால் உணவு நன்றாக செரிமானம் ஆகின்றது.
 
சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை சிறப்பாக செயல்படுவதற்கு பாகற்காயானது உதவுகிறது. சிறு நீரகத்தில் உள்ள கற்களை கரைப்பதற்கும்  உதவுகின்றது.
 
சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட விரும்புபவர்கள் வாரம் ஒருமுறை பாகற்காயை சமைத்து சாப்பிடுவது நல்லது. பாகற்காயை ஜுஸ் உடலின் ஆற்றலை மேம்படுத்தும். வலிமை அதிகரிக்கும்.
 
நம் உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் பல வகையான மாற்றங்களால், உடலில் சேரக்கூடிய பல வகையான நச்சுக்களின் சேர்மானத்தினால் புற்றுநோய் ஏற்படுகிறது. அன்றாடம் பாகற்காய் பொரியல் அல்லது கூட்டு சாப்பிட்டால் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.
 
பாகற்காயானது இயற்கையிலேயே மிகுந்த காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மை கொண்டது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகரித்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
 
பாகற்காயானது உடலுக்கு குளிர்ச்சி தரும். உடல் காய்ச்சலை தடுக்கும். பாகற்காய் சாறு கொண்டு மூலம் நோயை கட்டுப்படுத்தலாம். பாகற்காயை இலைச் சாற்றுடன் மோர் கலந்து குடித்தார் மூல நோய் குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

அடுத்த கட்டுரையில்
Show comments