Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடுவது நல்லது ஏன் தெரியுமா...?

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (22:09 IST)
சிலருக்கு பசி உணர்வு குறைவாக இருக்கும். இவர்கள் சுண்டைக்காயை பக்குவம் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பசி உணர்வு அதிகமாகி உடல் ஆரோக்கியம் மேம்படும்.


சளி அல்லது ஜலதோஷம் உள்ளவர்கள் பிஞ்சு சுண்டைக்காயைச் சமைத்து அல்லது சுண்டைக்காய் காரக்குழம்பு வைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டை, நெஞ்சில் ஏற்படும் சளிக்கட்டு குறையும்.

சுண்டைக்காயில் கால்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது. எனவே சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் உறுதியடையும்.

சுண்டை வற்றல் தூள், 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோரில் கலந்து பகலில் மட்டும் குடித்து வந்தால் அஜீரண பிரச்சனை விரைவில் நீங்கும். சுண்டக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி இரத்தம் சுத்தமாகும்.

அதீத உடல் உஷ்ணம் மற்றும் அதிக அளவு கார உணவுகள் சாப்பிடுவதாலும் மூலம் உருவாகிறது. இளம் சுண்டைக்காய்களை மிதமான காரம் சேர்த்து குழம்பு வைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலம் பிரச்சனை விரைவில் நீங்கும்.

ஜலதோஷம் மற்றும் சளி பிடித்த காலத்தில் சிலருக்கு குரல் கட்டிக்கொண்டு சரியாக பேச முடியாமல் போகிறது. சிலருக்கு வேறு சில காரணங்களால் குரல் வளம் குறைகிறது. இவர்கள் சுண்டைக்காய்களை அடிக்கடி பக்குவப்படுத்தி சாப்பிட்டு வந்தால் குரல் வளம் மேம்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments