Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது தெரியுமா...?

Webdunia
உருளைக்கிழங்கு அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். ஆனால் சமைத்த உருளைக்கிழங்கை பிரிட்ஜில் வைப்பது தவறு. அதனை மீண்டும் சூடுபடுத்தினால் அதன் ஊட்டச்சத்துக்கள் அழிந்து விடும். மேலும் செரிமான கோளாறுகளை உருவாக்கும்.

காளானில் புரோட்டீன் அதிகமாக உள்ளது. அதனை மறுபடியும் சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறும். இது செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும். எனவே காளானை சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது.
 
சிக்கன் உணவுகள் சிக்கன் குழம்பு இவைகளை ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. இது உங்களுக்கு கடுமையான செரிமான பிரச்சினைகளை உருவாக்கும். மேலும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.
 
பழைய கீரையை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. இதனால் அதில் உள்ள நைட்ரேட் சிதைந்து போகும். இதன் விளைவாக புற்றுநோய் அபாயம் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 
பீட்ரூட்டை சூடுபடுத்துவதால் கீரையை போலவே, பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டும் அழிந்து போகும். எனவே பீட்ரூட்டை சமைத்த உடனே சாப்பிடுவது நல்லது.
 
முட்டைகளில் புரதச்சத்து மிக அதிகமாக உள்ளது. அதனை சரியான முறையில் சாப்பிட்டால்தான் அதன் சத்துக்கள் கிடைக்கும். முட்டையை ஒருபோதும் மீண்டும் சூடாக்கி சாப்பிடக்கூடாது. முட்டையை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால் அதில் உள்ள புரத சத்தின் கூறுகள் முற்றிலும் மாறுபடும். இது உங்கள் ஆரோக்கியத்தில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடையில் அதிகரிக்கும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று: என்ன செய்ய வேண்டும்?

நடனம் ஆடினால் ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனை சரியாகுமா? ஆய்வு முடிவு..!

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

ஐஸ் கட்டி நீர் தெரபியால் கிடைக்கும் பலன்கள்..!

சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments