Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீழாநெல்லி எந்த நோய்களுக்கு மருந்தாகிறது தெரியுமா...?

Webdunia
கீழாநெல்லி வேரை அரைத்து பசும்பாலுடன் கலந்து, காலை, மாலை 3 நாட்கள் கொடுக்க உடல் சூடு குறைந்து குளிர்ச்சி பெறும். கீழாநெல்லி தோசையை வாரம்  இரண்டு முறை சாப்பிட்டால் உடலில் இயற்கையாகவே நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும். 

* தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி முதலியவை நீங்கும்.
 
* தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளைக் கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து  நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
 
* கீழாநெல்லி கல்லீரலை பாதுகாக்கும் தன்மையுடையது என பல்வேறு ஆய்வுகள் மூலம் தெளிவுபடுத்தி உள்ளனர். கல்லீரல் கோளாறுகளை மிக விரைவில்  குணப்படுத்த கூடிய ஆற்றல் கொண்டுள்ளது. 
 
* காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவு கீழாநெல்லிச் சாறு குடித்து வந்தால் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். அத்துடன் கல்லீரலில் சேர்ந்துள்ள அசுத்தங்களை வெளியேற்ற கீழாநெல்லி உதவி புரிகிறது.
 
* மஞ்சள் காமாலையை குணப்படுத்த கீழாநெல்லியை தவிர வேறு இயற்கை மருந்து கிடையாது. கீழாநெல்லி, தும்பை இலை, கரிசலாங்கண்ணி இவைகளை சம  அளவு எடுத்து நன்றாக அரைத்து காலை, மாலை சுமார் பத்து நாட்கள் உண்டு வந்தால் காமாலை நோய் பூரணமாக  குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments