Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளிவிதையில் உள்ள மருத்துவ பலன்கள்...!!

Webdunia
ஓமேகா 3 நிறைந்திருக்கும் இந்த ஆளிவிதையில் லிகான்ஸ், ஃபைட்டோகெமிக்கல்ஸ் நிறைந்திருக்கிறது. குறிப்பாக பெண்களின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ஆளிவிதையில் நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க இதனை சாப்பிடலாம்.  ஆளிவிதையை தொடர்ச்சியாக சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
ஆளிவிதையில் அதிகபடியான நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது. ஆளிவிதையை அதிகளவில் உட்கொள்ளும்போது, வயிறு மற்றும் குடல் பகுதிகள் ஆரோக்கியமாக இருக்கும்.
 
உடலுக்கு தேவையான நீர்ச்சத்து இல்லாதபோது, அதிகமாக ஆளிவிதை உட்கொள்ளும்போது, குடல் அடைப்பு ஏற்பட நேரிடும். ஆளிவிதையின்  எண்ணெயை சரும பிரச்சனைகள் உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.
 
ஆளிவிதையை இரவில் ஊறவைத்து காலையில் சுண்டல் போல தாளித்துச் சாப்பிட்டு வந்தால், இதயத்தைக் காப்பாற்றுகிறது, இரண்டாவது மூளையின் சக்தி அதிகரிக்கிறது. மூன்றாவது புற்றுநோய்வராமல் தடுக்கிறது.
100 கிராம் ஆளிவிதை 530 கலோரி சக்தி, 37 கிராம் நல்ல கொழுப்பு, 28 கிராம் நார்ச்சத்து, 20 கிராம் புரதம் தருகிறது. புரதச் சத்து நிறைந்துள்ள  ஆளிவிதையில் லிக்னன்ஸ், நார்ச்சத்து, ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலம், என்று மூன்று உயிராற்றலைச் சுறுசுறுப்பாக்கும் சத்துக்களும்  உள்ளன.
 
இந்த மூன்று சத்துகளும் முதலில் இரத்தக்குழாய்களை நன்கு சுத்தம் செய்து கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றிவிடுகின்றன. நாம்  சாப்பிடும் சில உணவுகளில் ஒமேகா-3ம், நார்ச்சத்தும் இருக்கின்றன. ஆனால், லிக்னன்ஸ் கிடையாது. ஆளிவிதையில் மட்டுமே இது உண்டு.
 
மலச்சிக்கலால் அவதிப்படுகிறவர்களுக்கு இதில் உள்ள நார்ச்சத்து பெருங்குடலில் அனைத்தையும் இளக்கி வெளியேற்றிவிடும். இதேபோல சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமலும் ஆளிவிதை பாதுகாக்கிறது.
 
மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை எதிர்த்து செயல்படும் திறன்கள் ஆளிவிதைக்கு உள்ளதை அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments