Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்ணெய் தேய்த்து குளிப்பதால் என்னவெல்லாம் நன்மைகள் தெரியுமா...?

Webdunia
உடலில் உள்ள அதிகபடியான சூட்டை சமநிலைக்கு கொண்டு வந்து, உடலின் நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து உடலை சூடு சம்பந்தமான நோய்களில் இருந்து  பாதுகாக்கும்.
 


எண்ணெய் தேய்த்துக் குளிக்க நல்லெண்ணெய்யையே பயன்படுத்த வேண்டும். எண்ணெய் தேய்க்கும் பொழுது, எண்ணெய்யை ஒவ்வொரு காதிற்குள்ளும் மூன்று துளிகளும், ஒவ்வொரு மூக்கு துவாரத்திலும் இரண்டு துளிகளும், பின் கண்களில் இரண்டு துளிகளும் விட்டு, பின் மெதுவாக தலை உச்சியிலிருந்து உள்ளங்கால்  வரைக்கும் சூடு பறக்க தேய்க்க வேண்டும்.
 
காதில் எண்ணெய் விடுவதினால் தலையில் வரக்கூடிய நோய்களும், கண்களில் விடுவதினால் காதின் நோய்களும், உள்ளங்கால்களில் தேய்ப்பதினால் கண்  நோய்களும், தலையில் தேய்த்து குளிப்பதால் அனைத்து நோய்களும் குணமாகும் என்று சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
எண்ணெய் தேய்த்தவுடன் உடனே குளிக்காமல் சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். அவ்வாறு குளிக்கும் போது எண்ணெய்யிலுள்ள சத்துக்கள் உடலால்  உறிஞ்சப்படும். நல்லெண்ணெய் தேய்த்து சுமார் 30 நிமிடம் ஊறவைத்துப் பின் இளஞ்சூடான வெந்நீரில் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். அதிகாலையிலேயே  குளித்து முடித்துவிட வேண்டும்.
 
வாரமிருமுறை அதாவது, ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளிப்பது  நல்லது என்று சித்த மருத்துவம் கூறுகிறது. 
 
அதிக வெயிலில் அலையக்கூடாது. குளிர்ந்த உணவுகளான பானங்கள், ஐஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது. அன்றைய தினம் உடலுறவு வைத்து  கொள்ளக் கூடாது. நண்டு, கோழி, மீன், செம்மறி ஆடு போன்ற அசைவ உணவுகளைத் அன்றைய தினம் தவிர்த்து விடவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்