Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வால்நட் தினமும் சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா...?

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (17:35 IST)
தினமும் வால்நட் சாப்பிட்டு வந்தால் முதுமையை தள்ளி போடலாம். வால்நட் எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது. எனவே எடை குறைக்க நினைப்பவர்கள் வால்நட் தினமும் சாப்பிட்டால் படிப்படியாக எடை குறையும்.


வால்நட்டில் அதிக அளவில் வைட்டமின் பி7 மற்றும் பயோட்டின் சத்துக்கள் இருப்பதால் தலைமுடி உதிர்வதை தடுத்து நன்றாக வளர செய்கிறது.

நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிட்ட பின் வால்நட் சாப்பிட்டால் வயிற்று வலி மற்றும் அஜீரண கோளாறுகள் ஏற்படும் ஏனென்றால் வால்நட்டில் அதிக புரத சத்துக்கள் உள்ளது.

வால்நட் பருப்பை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள புரத சத்துக்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் உள்ளதால் இது உடலுக்கு தேவையான அனைத்து சக்தியையும் கொடுக்கிறது.

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. ஒரு நாளைக்கு 20 முதல் 84 கிராம் வரை சாப்பிடலாம்.

வால்நட்டை கொஞ்சம் அரைத்து சிறிது பால் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் சருமத்தில் உள்ள அழுக்குகளை போக்கி முகத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது.

சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பின் வால்நட் சாப்பிடலாம். இரவில் சாப்பிடுபவராக இருந்தால் தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த வால்நட் சாப்பிட்டால் நல்ல பலனை தரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments