Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புளிச்ச கீரை சாப்பிட்டு வருவதால் என்னவெல்லாம் நன்மைகள் தெரியுமா...?

Webdunia
உடலில் செல்களில் ஏற்படும் சில மாற்றங்களால் புற்று நோய் ஏற்படுகிறது. பல வகையான புற்று நோய்கள் இன்று மனித குலத்தை பயமுறுத்துகின்றன. இந்த புற்று நோய் மனிதர்களின் உடலின் பல பாகங்களை பாதிக்கிறது. 

புளிச்ச கீரையை அதிகளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலின் செல்கள் வலுப்பெற்று, புற்று செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்களை குறைகிறது. வயிற்று புண்கள் காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரங்கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. 
 
தோல் வியாதிகள் புளிச்ச கீரை தோல் வியாதிகளுக்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. புளிச்ச கீரையை நன்றாக மை போல் அரைத்து கொண்டு அதை சொறி, சிரங்கு போன்ற தோல் வியாதிகள் இருக்கும் இடங்களில் தடவினாலும், அடிக்கடி இக்கீரையை பக்குவம் செய்து சாப்பிடுவதாலும் இதில் நிறைந்திருக்கும் ஆன்டி  ஆக்சிடண்டுகள் தலைமுடி, தோல் போன்றவற்றின் நலத்தை மேம்படுத்தும்.
 
நமது உடலில் ஓடும் ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தி குறைவால் ரத்த சோகை நோய் அல்லது குறைபாடு ஏற்படுகிறது. புளிச்ச கீரையில் பல வைட்டமின் சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. இவையனைத்தும் ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ரத்த சோகை குறைபாட்டை  போக்குகிறது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது. 
 
புளிச்ச கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் ரத்தம், செரிமான உறுப்புகள் போன்றவற்றில் தங்கியிருக்கும் நுண்ணுயிரிகளை அழித்து  அவர்களின் உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து காக்கிறது.
 
புளிச்ச கீரையில் இத்தகைய கெட்ட கொழுப்புகளை அழிக்கும் சக்தி அதிகம் நிறைந்திருக்கிறது. இதை சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கிறது.  உடல் எடை அதிகமாகாமல் தடுக்கிறது. நோயெதிர்ப்பு நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் சத்துகள் இயற்கையிலேயே புளிச்ச கீரையில் அதிகம் இருக்கிறது.
 
புளிச்ச கீரையை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் நிவாரணம் ஏற்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments