Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லிக்காய் ஜூஸ் பருகி வருவதால் என்னென்ன நன்மைகள் உண்டு தெரியுமா...?

Webdunia
நெல்லிக்காய்யில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால், எலும்புகள் உறுதியாக்கும். உருக்கி என்ற செல்கள் எலும்பை வலுவிளக்கச் செய்யும். நெல்லிக்காய் அதைத் தடுக்கும் ஆற்றல் உடையதால், எலும்புகளுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் அதிகம் இருப்பதால், புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும்.
 
நெல்லிக்காயில் எந்தப் பொருளிலும் இல்லாத அளவு வைட்டமின்-சி இருக்கிறது. ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்கும்.
 
மேலும், ஈரல் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைக்கும் தன்மை கொண்டதால், உடலில் உள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றும். ரத்தத்தையும்,  உடலையும் சுத்தம் செய்ய நெல்லிக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 
 
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் பருகிவர, ரத்தம் நன்றாக ஊரும். ரத்த சோகை வராமல் தடுக்கும்.
 
நெல்லிக்காய் கூந்தலை நன்றாக கருமையாகவும், செழிப்பாகவும் வளர உதவும். கூந்தல் உதிராமல் தடுக்கும்.
 
நீண்டநாள் இளமையாகத் தோற்றமளிக்க உதவும். வயது முதிர்வை தடுக்கும்.
 
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் பருகி வருவதால், உடல் எடையை மட்டும் குறைக்காது, கொலெஸ்ட்ரால் அளவுகளையும் குறைக்கும்.
 
நெல்லிக்காயில் உள்ள அமினோ அமிலங்களும், ஃபேட்டி அமிலங்களும் இருதயத்தின் ஒட்டுமொத்த செயல்களையும் சீராக வைக்க உதவும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

கேனில் அடைக்கப்பட்ட பானங்கள் குடித்தால் புற்றுநோய் வருமா? அதிர்ச்சி தகவல்

பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான முக்கிய ஊட்ட்சத்துக்கள் எவை எவை?

காதில் தொடர்ச்சியாக இரைச்சலா? என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments