Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமையலுக்கு பயன்படுத்தப்படும் கிராம்பில் இத்தனை மருத்துவ குணங்களா...?

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2022 (15:29 IST)
சமையலுக்கு பயன்படுத்தப்படும் கிராம்பில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஆயுர்வேத முறைப்படி, கிராம்பு இரத்த ஓட்டம், செரிமானம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.


கிராம்பில் கார்போ ஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பை தினசரி எடுத்து கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

இருமல், குரல் வளை அழற்சி, தொண்டை வலி மற்றும் ஜலதோஷம் போன்ற மேல் சுவாசக் கோளாறுகளை போக்க கிராம்பு உதவுகிறது. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் தினமும் இரண்டு கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றத்தை போக்க முடியும்.

கிராம்பை வாயில் போட்டு மென்று வரும் போது இரைப்பை எரிச்சல், வாய்வுத் தொல்லை போன்றவற்றை சரி செய்யும். கிராம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ப்ரீ ரேடிக்கலை எதிர்த்துப் போராட உதவுகிறது.

கிராம்பு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலினுள் ஊடுருவும் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராட உதவுகிறது. கிராம்பு அதிகம் எடுத்த்கொண்டால் திடீரென்று ரத்த சர்க்கரை அளவு குறையலாம். அதனால் கவனமாக எடுப்பது நல்லது.

கிராம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கிறது. உணவில் கிராம்பை சேர்த்து கொண்டு வந்தால் டைப் 1 டயாபெட்டீஸ்யை கட்டுப்பாட்டில் வைக்கிறது. ஏனெனில் கிராம்பில் உள்ள பொருட்கள் இன்சுலினை தூண்டி இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகளவு எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்..!

குழந்தைகளுக்கு பிஸ்கட் சாப்பிட கொடுப்பது நல்லதா?

சுண்டல் அவித்து சாப்பிடுவதால் கிடைக்கும் வைட்டமின்கள்.. ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்..!

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் என்னென்ன?

பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments