Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தனை மருத்துவ பயன்களை கொண்டுள்ளதா லவங்கம்!

Webdunia
இலவங்கத்தின் மொத்தப் பகுதியும் நல்ல மருத்துவ குணம் ஒளிந்துள்ளது. அதாவது இன்றைய நவீன மருத்துவத்தில் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக பல ரசாயனக் கலவையால் ஆன மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. கிராம்பு எனப்படும்  இலவங்கம் வாந்தியை நிறுத்தக் கூடிய அல்லது தடுக்கக் கூடிய தன்மையுடையது.

 
 
வயிற்றில் சேர்ந்து துன்புறுத்தும் வாயுவைக் கலைத்து வெளியேற்றக் கூடியது. வயிற்றில் ஏற்படும் கோளாறுகளைப் போக்க கூடியது, பசியின்மையைப் போக்கி பசியைத் தூண்டக் கூடியது. வயிற்றில் அமிலச் சுரப்பால் ஏற்படும் எரிச்சலைத் தணிக்க  கூடியது.
 
வயிற்றுக் கடுப்பைப் போக்கக் கூடியது, நுண் கிருமிகளை அழிக்கக் கூடியது. தொற்று நோய்க் கிருமிகளை அழிக்கக் கூடியது. வாய் மற்றும் தொண்டைப் பகுதியின் மென்சதைப் பகுதியில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதற்கும் இலவங்கம்  பயன்படுகிறது. 
 
பல்வலி ஏற்பட்ட போது இலங்கதைலத்தைப் பஞ்சில் நனைத்து மேலே சிறிது நேரம் வைத்திருப்பதால் ஒரு வலி மறுப்பானாக  பயன்படுகிறது. இலவங்கம் இயற்கையில் நமக்குக் கிடைத்த வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் விளங்குகிறது.
 
இலவங்கத்தின் அடங்கியுள்ள “யூஜினால்” என்னும் வேதிப்பொருள் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்க உதவும். பரம்பரை மருத்துவத்தில் இலவங்கத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து அதைப் பருகச் செய்வதால்  செரிமானமின்மை, வயிற்று உப்புசம் ஆகியவை குறைவதாக உள்ளது.
 
இலவங்கத்தை உணவாகப் பயன்படுத்தும் போது தோல் புற்று நோய் உண்டாவது தடுக்கப்படுகிறது. மேலும் நுரைஈரல் புற்று நோயை தடுத்து நிறுத்தவல்ல மருந்தாகவும் செயல்படுகிறது. இலவங்க எண்ணெய் ஒரு கொசு விரட்டியாகவும் செயல்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments