Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல முக்கியமான வைட்டமின்கள் நிறைந்து காணப்படும் கிராம்பு !!

Webdunia
வியாழன், 19 மே 2022 (12:05 IST)
கிராம்புகளில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, இவை நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கிறது.


கிராம்பில் பல முக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. கிராம்புகளில் காணப்படும் சேர்மங்கள் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவும் என்று சில ஆராய்ச்சி கூறுகிறது.

தினமும் 2 கிராம்பை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் தான் அதிகம் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பவை.

கிராம்பை உணவில் சேர்த்துக் கொண்டால் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருமல், சளி, வைரஸ் தொற்று, சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது.

குமட்டல், எதுக்களித்தல், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை போன்ற வயிற்றுப் பிரச்சினைகளை போக்க உதவுகிறது. மேலும் இது செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.

கிராம்பில் இருக்கும் பினைல்புரப்போனைடு என்கிற வேதிப்பொருள் செல்களின் மரபணு பிறழ்வுகளை தடுத்து கேன்சர் செல்கள் உருவாவதை தடுக்கிறது. மேலும் உடலின் புற்று நோய் பாதித்த உடல் செல்களை மீண்டும் வளர்ச்சி பெறாமல் தடுக்க உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments