Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்தரத்தை எந்தெந்த நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது...?

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (14:30 IST)
சித்தரத்தைக் கிழங்கை பச்சையாக எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி காயவைத்துப் பக்குவப்படுத்தி வைப்பார்கள். இது ஒரு வலி நிவாரணி, சளியைக் குணப்படுத்தும், இருமலைக் குணப்படுத்தும்.


சித்தரத்தை மூட்டு வாத வீக்கம் குணப்படுத்தும். வயிற்றுப் புண் அல்சரைக் குணப்படுத்தும். தொண்டைப் புண்ணைக் குணப்படுத்தும்.

சித்தரத்தை எடுத்து சுத்தப்படுத்தி விட்டு பிறகு ஒரு லிட்டர் தண்ணீர் விட்டுக் காய்ச்சி அரை லிட்டராக ஆகும் வரை கவனித்து வடிகட்டி கசாயமாக காலை மாலை 50 மில்லி வீதம் குடித்து வந்தால் எப்பேர்பட்ட இருமலும் ஒரு வாரத்தில் குணமடைந்து விடும்.

சித்தரத்தை, ஓமம், கடுக்காய் தோல், மிளகு, திப்பிலி, தாளிச்சபத்திரி, சுக்கரா இவற்றை சம அளவு எடுத்து பொடித்து சூரணம் செய்து தேனில் கலந்து தினமும் காலை மாலை 50 மில்லி வீதம் சாப்பிட சளி குணமடையும்.

மூட்டுவாத வீக்கம் குறைய தேவதாரு 100 கிராம், சாரணைவேர் 100 கிராம், சீந்தில் கொடி 100 கிராம், சித்தரத்தை 100 கிராம், நெருஞ்சில் 100 கிராம், மேலும் ஆமணக்கு 100 கிராம் இவைகளை பெருந்தூளாக இடித்து வைத்துக் கொண்டு 50 கிராம் பொடியை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு மெல்லிய தீயாக எரித்து 150 மில்லியாக சுண்ட வைத்து மருந்துகளை கசக்கிப் பிழிந்து வடிகட்டி வேளைக்கு 50 மில்லியாக ஒரு நாளைக்கு 3 முறை சாப்பிட்டு வந்தால் மூட்டு வாத வீக்கம் குணமாகும்.

சித்தரத்தையை எடுத்து இடித்து பொடி செய்து கொள்ள வேண்டும். இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டியில் போட்டு அதில் தேவையான அளவு தேன் விட்டு காலை மாலை சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண் குணமடையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகளவு எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்..!

குழந்தைகளுக்கு பிஸ்கட் சாப்பிட கொடுப்பது நல்லதா?

சுண்டல் அவித்து சாப்பிடுவதால் கிடைக்கும் வைட்டமின்கள்.. ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்..!

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் என்னென்ன?

பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments