Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதுவலி ஏற்படுவதற்கான காரணங்களும் அதனை சரிசெய்வதற்கான வழிகளும்!!

Webdunia
சத்தங்களை கேட்பதற்கு மட்டுமே நம்முடைய காதுகள் பயன்படுவது இல்லை. நாம் நிலையாக நிற்பதற்கும் கூட காதுதான் முக்கிய  பங்காற்றுகிறது.
புறச்செவி, நடுச்செவி, உட்செவி என்று மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சத்தம் எழுப்பும்போது, அது நம் வெளிக்காதின் வழியே  ஊடுருவி காது ஜவ்வை அசைக்கிறது.
 
விரல்களால் மூக்கை அழுத்தி பிடித்து, முடிந்த அளவுக்கு வாயை மூடி காற்றை முழுவதுமாக உள்ளிழுத்து, காது வழியாக வெளியேற்ற முயற்சிக்கலாம். இதனால், காதுக்குள் இருக்கும் ஜவ்வானது சமநிலையை அடைந்து அடைப்பு வலி குறையும்.
 
மூக்கின் பின் பகுதியில் இருந்து காதுக்குச் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டு நோய்த் தொற்று உண்டாவதால் காது வலி வரும் சளியும் மூக்கடைப்பும் மிகவும் அதிகமாகும் போது காதுவலி வரும். தொடர்ந்து மூக்கு சீந்தினாலும் மிக வேகமாக அழுத்தத்துடன் மூக்கு சீந்தினாலும்  காதில் வலி ஏற்படும்.
 
தேவையில்லாமல் அடிக்கடி அடிக்கடி காதைச் சுத்தம் செய்தால் கூட வலி வரும். கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு காதை குடைவதால் வலி வரும். காதில் பூச்சி புகுந்துவிட்டால், சில துளி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விடலாம். உடனே பூச்சி  செத்து வெளியே வந்துவிடும்.
 
காதுக்குள் இயற்கையாகவே வாக்ஸ் என்கிற திரவம் சுரப்பதால் அழுக்கு தானே வெளியேறிவிடும். அதனால் காதுக்குள் குச்சி, பட்ஸ் விட்டு  சுத்தம் செய்யக் கூடாது.

தொடர்புடைய செய்திகள்

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments