Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் சூடு பிரச்சனையை சரிசெய்யும் ஆமணக்கு எண்ணெய்....!

Webdunia
விளக்கெண்ணெய் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. விளக்கெண்ணெய், ஆமணக்கு விதைகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு தாவர எண்ணெய் ஆகும். மற்ற எண்ணெய்களைவிட அடர்த்தி அதிகமாகக் காணப்படுவதால், சற்று பிசுபிசுப்புத் தன்மையுடன் காணப்படும். விளக்கெண்ணெய்  குளிர்ச்சியூட்டக்கூடியது.
தொப்புளில் தினமும் எண்ணெய் விட்டால் கண் பார்வை தெளிவடையும். கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு போன்றவற்றை குணப்படுத்துகிறது விளக்கெண்ணெயைப் பயன்படுத்துவதால் மலச்சிக்கல் தீரும், வயிறு சம்பந்தமான கோளாறுகள் நீங்கும், வாய்வுத்தொல்லை  நீங்கும், வயிற்றுப் புண் நீங்கும், வயிற்றில் உள்ள கசடுகள் நீங்கும், வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும், உடலுக்கு குளிர்ச்சி தரும். 
 
விளக்கெண்ணெயுடன் துளசிச் சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சம் சாறு சம அளவு எடுத்து காய்ச்சிக் கொண்டு 15 மில்லி அளவு உட்கொண்டு  வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் அகலும்.
 
மாதவிடாய் சரியாக வெளிப்படாமல் வயிற்றுவலியை ஏற்படுத்தும். அப்போது அடிவயிற்றில் விளக்கெண்ணெயைத் தடவி அதன் மீது ஆமணக்கு இலைகளை வதக்கி பொறுக்கும் சூட்டில் ஒத்தடம் கொடுத்து வந்தால் ரத்தப்போக்கு ஏற்பட்டு வயிற்று வலி குறையும். 
 
பருவமடைந்த பெண்களுக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இது கர்ப்பப்பை தொடர்பான கேளாறுகளை  சரி செய்யும். ஆனால் அந்த வழக்கம் நாளடைவில் குறைந்து வருவதே பல கர்ப்பப்பை பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

நீரிழிவு பாதம் வெட்டி அகற்றப்படுவதை தடுக்கும் உத்திகள்! - புரொஃபசர் M. விஸ்வநாதன் வழங்கிய உரை!

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

`அல்சைமர்' எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments