Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்களின் பார்வையை தெளிவாக்கி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் கேரட் !!

Webdunia
திங்கள், 2 மே 2022 (13:22 IST)
கேரட் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது என பலரும் சொல்லக்கேட்டிருப்போம், இதற்கு காரணம் இதிலுள்ள பீட்டா கரோட்டின் தான். விட்டமின் A கண்களின் பார்வையைத் தெளிவாக்கி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.


வாரத்திற்கு மூன்று முறை கேரட் சாப்பிடுவதால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கலாம். கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் நிறைந்துள்ள கேரட்டை தாராளமாக அனைவரும் சாப்பிடலாம், குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கேரட்டை எடுத்துக் கொள்ளலாம்.

கேரட்டில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமானம் எளிதாக நடைபெற உதவுவதால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குறிப்பாக இதில் கரையும் மற்றும் கரையாக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் நன்மை தரும் பக்டீரியக்களின் செயல்பாடுகளை தூண்டுகிறது.

மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்கள் தொடர்ந்து கேரட்டை சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை பெறலாம். கேரட்டில் அதிகம் நிறைந்துள்ள விட்டமின் ஏ நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது, இவை ரத்த வெள்ளை அணுக்கள் அதாவது T-செல்களுக்கு உதவிபுரிகிறது.

கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும். பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

கேரட்டை அரைத்து ஜுஸாகக் குடித்தால் வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி இருப்பவர்களுக்கு மருந்தாகும். ஒரு டம்ளர் கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து காலையில் குடித்துவர உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படும். சருமம் வறண்டு போய், அரிப்பு ஏற்பட்டால், கேரட்டைத் துருவி சாலட் ஆகச் செய்து சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தக்காளியில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

முழங்கால் செயற்கை தசைநார் சிகிச்சை! தமிழகத்தில் முதலிடம்! – ரெலா மருத்துவமனை!

சோம்பை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்..!

பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு ஏற்படும் தீங்குகள்..!

உடலுக்கு தேவையான புரதச் சத்துக்கள் உணவுகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments