Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செரிமான மண்டலத்தின் ஆரேக்கியத்தை மேம்படுத்தும் முட்டைக்கோஸ் !!

Webdunia
முட்டைக்கோஸில் லாக்டிக் அமிலம் அதிகம் உள்ளது. எனவே இது குடலில் உள்ள நோய்த்தொற்றுக்களை அழித்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

முட்டைக்கோஸில் கால்சியம் மற்றும் விட்டமின் கே இருக்கிறது. இவை நம் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. அதோடு இதிலிருக்கும் சத்துக்கள் நம் தசைகளையும்  நரம்புகளையும் வலுவாக்குகிறது. விட்டமின் கே ரத்தம் உரைதலை தடுத்து சீரான ரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.
 
முட்டைகோஸில் ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்திருக்கின்றன. ஒரு நாளைக்கு ஒரு கப் நிறைய முட்டைகோஸ் சாப்பிட்டாலே உங்களுக்கு ஒரு நாளில் தேவைப்படுகிற விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி ஆகியவை ஐம்பது சதவீதம் கிடைத்துவிடும்.இது நம் உடல் உறுப்புகள் சீராக செயல்படுவதற்கு மிகவும்  அவசியமானதாகும்.
 
கர்ப்பமான பெண்களுக்கு ஃபோலிக் அமிலம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அது முட்டைகோஸில் நிறைந்திருக்கிறது. கருவில் இருக்கும் குழந்தை வளர்ச்சிக்கும்  தாய்ப்பால் அதிகமாக சுரக்கவும் இந்த காயை தொடர்ந்து சேர்த்துக் கொள்ளலாம்.
 
முட்டைகோஸ் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் மிகுந்த பலன் அளிக்கக்கூடியது. முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து  அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும். சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.
 
முட்டை கோஸை தொடர்ந்து எடுத்து வந்தால் நம் சருமம் சுருக்கமடைந்து வயதான தோற்றம் அடைவதை தடுக்க முடியும். இதில் அதிகப்படியாக விட்டமின் சி  இருப்பதால் இவை நம் சருமம் இளமையாக இருக்க உதவிடும்.சருமத்தில் இருக்கும் செல்கள் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மண் பாணை தண்ணீர் எப்படி குளிர்ச்சியாகிறது என்பது தெரியுமா? இதோ விளக்கம்..!

எப்போதும் உடல் சோர்வுடன் உள்ளதா? இதெல்லாம் காரணமாக இருக்கலாம்..!

பார்லருக்கு போகாமல் முகத்தை பொலிவாக வைத்து கொள்வது எப்படி? எளிய ஆலோசனைகள்..!

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு சில எளிய வழிமுறைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments