Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகப்படியான நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படும் ப்ரோக்கோலி !!

Webdunia
நம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் கே அதிகளவு தேவைப்படுகிறது. வயதான காலங்களில் வைட்டமின் கே சத்து குறைவாக இருந்தால் எலும்பு பிரச்சனை ஏற்படும். மேலும் எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. 

ப்ரோக்கோலியை குறைந்தது வாரத்திற்கு இரண்டு முறையாவது சாப்பிட்டு வருபவர்களுக்கு உடல் புத்துணர்ச்சி, இளமை தோற்றம் ஆகியவற்றை ப்ரோக்கோலியில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடன்கள் நமக்கு தருகிறது. மேலும் தோல் சுருக்கங்களை தடுக்கிறது.
 
ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து பித்தப்பையில் சுரக்கும் அமிலங்களை செரிமான உறுப்புகளில் படியச் செய்கிறது. மேலும் அதிகப்படியான கொலஸ்ட்ரால் உடலில் தங்காமல் வெளியேறச் செய்கிறது.
 
ப்ரோக்கோலியில் இருக்கும் நார்ச்சத்து, வயிறு மற்றும் குடல்களில் செரிமானத்திற்கு உதவும் செல்களை அதிகரிக்கிறது. வாரத்திற்கு இரண்டு முறை ப்ராக்கோலியை சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல்களின் நலத்திற்கு மிகவும் நல்லது.
 
சூரியனிடம் மிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் நமது சருமத்திற்கு மிகுந்த பாதிப்பை தருகிறது. அதனால் தோல் புற்றுநோய் மற்றும் பல சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது. 
 
ப்ரோக்கோலியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக இருப்பதால், அவற்றை சாப்பிடும் போது சரும பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமைகிறது. எனவே எலும்பு வலுவடைவதற்கு ஒரே உணவு ப்ராக்கோலி மட்டும் தான். அதனால் வாரத்திற்கு இரண்டு முறையாவது ப்ராக்கோலி சாப்பிட வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

ஐஸ் கட்டி நீர் தெரபியால் கிடைக்கும் பலன்கள்..!

சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து..!

இனிப்பு உணவுகள் அதிகம் சாப்பிட்டால் அறிவாற்றல் பாதிக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments