Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலும்பை வலுப்படுத்த அன்றாட உணவில் கருப்பு உளுந்து...!!

Webdunia
சிறு குழந்தைகளுக்கு தோல் உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும்  எலும்புகள் வலுப்பெறும்.
தோல் உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால்  உடல் சூடு தணியும்.
 
தோல் உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு  பெறும்.
 
தோல் உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் பித்தத்தைக் குறைக்கும். தடுமாறி விழும்போது உண்டாகும்  எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்தாகும்.
நாற்பது வயதை கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு தோல் நீக்காத உளுந்துடன், தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு  வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.

இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் கருப்பு உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு  வந்தால் இடுப்புவலி நீங்கும்.
 
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலியை போக்கும். கர்ப்பப்பை வலுப்படுத்தும். பெண்களுக்கு மிகவும் அவசியமானது.  கருப்பு உளுந்து பெண்களின் இடுப்பு எலும்பை வலுப்படுத்தும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments