Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்குமா பாகற்காய்...?

Webdunia
பாகற்காய் சாறு டைப் 2 நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பயன்படுகிறது. பசுமையாக உள்ள பாகற்காய் ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற  தொல்லைகள் தீரும். 

பாகற்காயினை தினமும் வேகவைத்து சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தி கூடும். ஒரு வாரம் தொடர்ந்து பாகற்காய் ஜீஸ் குடித்தால் ஈரல் தொடர்பான  பிரச்சனைகள் தீரும்.
 
தினமும் பாகற்காய் சாப்பிடுவதால் கெட்ட கொழுப்புகள் நீங்கி இதயம் பாதுகாக்கப்படுகிறது. பசியினையும் அதிகரிக்கும்.
 
பாகற்காயையோ, அல்லது அதன் இலைகளையோ வெந்நீரில் வேகவைத்து தினந்தோறும் சாப்பிட்டால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மேலும் குடற்புழுக்களை வெளியேற்றும். 
 
பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள், கண்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். பாகற்காயில் உள்ள பாலிபெப்டைடு-பி என்ற வேதிப்பொருள் இன்சுலினாக செயல்பட்டு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
 
பாகற்காயில் நார்ச்சத்து அதிகமுள்ளதால், செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்தத்தை சுத்திகரிக்கிறது. பாகற்காய், உணவுப் பையிலுள்ள பூச்சிகளை கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும்.
 
பாகற்காய் குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும். பாகற்காயை, அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால்,  இருமல், இரைப்பு, மூலம்,  வயிற்றுப் புழுக்கள் நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments