Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடிய நோய்களை எளிதில் போக்கும் பாகற்காய் !!

Webdunia
கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உண்டு. இரண்டுமே கறி சமைத்து உண்ணக் கூடியவை. இது கசப்புள்ளதாக இருந்தாலும் பருப்பு, தேங்காய் முதலியவற்றைச் சேர்த்து சமைத்தால் உண்பதற்கு சுவையாக இருக்கும்.

பாகற்காய் உணவுப்பையில் உள்ள பூச்சிகளைக் கொல்லும். பசியைத் தூண்டும். பித்தத்தை தணிக்கும். மலத்தை இளக்கும். பெண்களுக்கு பாலைக் கொடுக்கும். இதனுடன் சிறிது புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. பாகற்காயை அவ்வப்போது சேர்த்துக் கொண்டால் ஜுரம், இருமல், இரைப்பை, மூலம், வயிற்றுப்புழு ஆகியவை அகலும். நீரழிவு வியாதி உள்ளவர்கள் இதை சாப்பிட வேண்டாம்.
 
பாகற்காய் எளிதில் ஜீரணமாகாது என்றாலும் ஜடாராக் கினியை ஊக்குவிக்கும். கபம், பித்தம், ரத்த தோஷம், பாண்டு, குஷ்டம், மந்தம், காமாலை ஆகிய கொடிய நோய்களை எளிதில் போக்குவது இதன் இயல்பாகும்.
 
பாகற்காய் சிறந்த உணவுப் பொருளாக மட்டுமில்லாமல் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. பாகற்காய் இலையின் சாறினை ஒரு அவுன்சு சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும். இலையை அரைத்து உடம்பு முழுவதும் தடவி 1 மணி நேரம் ஊறியபின் குளிக்க வேண்டும். இது போன்று 3 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் நாய்க் கடியின் விஷம் உடம்பில் ஏறாது.
 
கொடி பாகல் இலையுடன் 500 மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்று போட்டு வந்தால் மாலைக்கண் அகலும். 2 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே சிறிது வெல்லத்தைக் கரைத்து சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப்பூச்சிகள் வெளியேறும். பாகல் சாற்றில் சிறிது குங்குமப் பூவை அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்த வயிறு சிறுத்து விடும். பாகல் இலைச் சாற்றை குடிப்பதால் பாம்பு விஷம் நீங்கும். 
 
பாகல் இலைச் சாற்றை 1 அவுன்ஸ் எடுத்துக் கொண்டு அதில் 2 அவுன்ஸ் நல்லெண்ணெய் கலந்து உட் கொண்டால் காலரா உடனே நீங்கும். 1 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவுக்கு பெருங்காயப் பொடியை கலந்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நிரந்தரமாக குணம் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்வதேச மீள் உருவாக்க மருத்துவம்! ரீஜென் 2025 மாநாடு! - பிளாஸ்மா சிகிச்சைக்கு வழிகாட்டுதல்கள்!

தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாதது என்ன?

ABC ஜூஸின் முக்கிய நன்மைகள். தினமும் அருந்துவதால் கிடைக்கும் முக்கியப் பயன்கள்

கூந்தல் பராமரிப்பு: நெல்லிக்காய் - முடி பலத்திற்கும் அடர்த்திக்கும்!

தினசரி ஓட்டம்: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான அற்புத மருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments