Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் !!

Webdunia
வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கும் கெட்ட கொழுப்பு நீக்கும். மேலும் கொழுப்பு நிறைந்துள்ள உணவில் இருக்கும் டிரைகிளரசைட் என்ற  கொழுப்பினை ரத்தத்தில் சேர்க்காமல் பாதுகாக்கும்.

வெந்தயத்தில் உள்ள புரதம் மற்றும் நிக்கோடினிக் முடி உதிர்வதைத் தடுப்பதும் மட்டுமில்லாமல் பொடுகு பிரச்னையில் இருந்து பாதுகாக்கிறது. இதில் உள்ள  லெசிதின் முடி வறண்டு போகாமல் இருக்கவும், பளபளப்பாகவும் மற்றும் முடியின் வேர் பகுதியை வலுவாக வைத்துக்கொள்ள உதவும்.
 
வெந்தயத்தை இரவே ஊறவைக்கவும். மறுநாள் அதை மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும். இதனை தலையில் தடவி பிறகு குளித்தால் தலைமுடி உதிர்வதை  கட்டுப்படுத்தி முடி வலுவாக இருக்க உதவும்.
 
வெந்தயத்தை தயிரில் ஊறவைத்து அரைத்து தலையில் தடவினால் பொடுகு பிரச்னை இருக்காது. முடியும் பளபளப்பாக இருக்கும். மருதாணியை தலையில் தடவும் முன் அதனுடன் சிறிதளவு வெந்தய பவுடரை சேர்த்து கலந்து தடவினால் முடி வறண்டு போகாமல் பாதுகாக்கும்.
 
வெந்தயத்தை, ஊறவைத்த தண்ணீரைக் கொண்டு தலைமுடி அலசினாலும் முடி பளபளப்பாகும். வெந்தயத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதால், அது  உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் வல்லமை கொண்டது.
 
இருதய பிரச்சனை, மூட்டுவலி மற்றும் உடல் பருமன் போன்றவற்றுக்கு நல்ல மருந்து. இதனை தினமும் ஊறவைத்து சாப்பிடலாம். அல்லது அப்படியே தண்ணீர் கொண்டு முழுங்கலாம்.
 
நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களின் டயட்டில் ஏதாவது ஒரு வகையில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்வது அவசியம். இதனை பொடித்து மோருடன் கலந்து சாப்பிடலாம். பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்சனை உள்ள பெண்களும் இதனை சாப்பிட்டு வந்தால் பிரச்னை நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments