Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்காயத்தை பாதத்தில் வைத்து தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்!!

Webdunia
இரவில் படுக்கும் போது வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து சாக்ஸ் அணிந்து தூங்குவதால், உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு நல்லது. இதற்கு வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட் தான் காரணம்.
வெங்காயத்தில் உள்ள பாஸ்பாரிக் ஆசிட்டானது, சருமத்தின் வழியே ஊடுருவி இரத்த நாளங்களில் நுழைந்து, இரத்தத்தை சுத்தப்படுத்துமாம். பாக்டீரியாக்களை அழிக்கும். இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரஸ் அதிகம் உள்ளது. எனவே இவை உடலில் உள்ள தீங்கு  விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடும்.
 
வெங்காயத்தை தினமும் பாதங்களில் வைத்துக் கொண்டு தூங்கினால், இதய ஆரோக்கியம் மேம்படுமாம். முக்கியமாக இந்த பழக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாம்.
 
நீங்கும் பாதங்களில் வெங்காயத்தை வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்து தூங்கினால், இதுவரை மிகுந்த தொந்தரவைக் கொடுத்துக் கொண்டிருந்த கழுத்து வலி, காது வலி போன்றவை நீங்கும்.
முக்கியமாக வயிற்றுப் பிரச்சனைகள், சிறுநீரக பிரச்சனைகள், குடல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகும். எப்படியெனில் வெங்காயத்தை பாதத்தில் வைக்கும் போது உடலினுள் ஒருவித வெப்பம் உருவாகி, அதனால் பல்வேறு பிரச்சனைகள் தீரும்.
 
உங்கள் பாதங்களில் இருந்து கடுமையான தூர்நாற்றம் வீசுமாயின், தினமும் பாதங்களில் வெங்காயத்தை வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு  தூங்கினால், பாதங்களில் இருந்து வீசும் துர்நாற்றம் போய்விடும்.
 
சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவஸ்தைப்படுபவராயின், வெங்காயத்தை இரவில் படுக்கும் போது உள்ளங்கால்களில் வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால், சளி, காய்ச்சல் போன்றவை குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments