பொன்னாங்கண்ணி கீரையின் பலன்கள் !!

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (16:17 IST)
கீரைகளில் பலவகை உண்டு. அதில் சிறந்த ஒன்று பொன்னாங்கன்னி கீரை. இது சருமத்திற்கு பளபளப்பான நிறத்தை தரக்கூடியது.


கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். உடல் எடையை குறைக்க மட்டுமில்லாமல் அதிகரிக்கவும் உதவுகிறது.

பொன்னாங்கன்னி கீரையில் துவரம் பருப்பு, நெய் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும், எலும்புகள் உறுதியாகி உடல் வலிமை பெரும்.

பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாயில் இருந்து வரும் துர்நாற்றம் நீங்கும். பொன்னாங்கண்ணி கீரையை பொறியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் சிவத்தல் நீங்கி நன்றாகப் தூக்கம் வரும்

பொன்னாங்கண்ணி கீரையை கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து சமையல் செய்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.

தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவாக தெரியும்.     பொன்னாங்கண்ணி கீரை கீரையை சாப்பிடுவதால் இதயம் மற்றும் மூளை புத்துணர்வு பெற்று சுறுசுறுப்பாக செயல்பட உதவும். மேலும் மூலநோய் மற்றும் மண்ணீரல் நோய்யை குணப்படுத்த உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

கண்களைப் பாதுகாக்க தினமும் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பழக்கங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments