Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம் அன்றாட உணவில் நெல்லிக்கனியை சேர்த்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்...!!

Webdunia
நெல்லிக்கனிக்கு இன்னொரு பெயரும் உண்டு. ‘காய கல்பம்’. நெல்லிக்காயயில் வைட்டமின் சி உள்ளதால் ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை  சுலபமாகக் கரைத்துவிட முடியும். எனவே, மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

ஒரு மனிதனுக்கு தினசரி 50 மி.கி அளவுக்கு வைட்டமின் ‘சி’ தேவைப்படுகிறது. இந்தத் தேவையை நெல்லிக்கனி உண்பதன் மூலமாக எளிதில் பெற்றுவிட முடியும். தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி, உடல்  எடையைக் குறைக்க முடியும்.
 
காட்டு நெல்லிக்கனியை தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிட, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு உயரும். அழகான சருமத்தையும் பெறமுடியும்.  நெல்லிக்காய் தைலம் முடி கொட்டுவதை நிறுத்தப் பயன்படுத்தப்படுகிறது.
 
நெல்லிக்காய் தைலம் செய்முறை: பச்சை நெல்லிக்காய், துளசி, கொட்டை நீக்கிய முற்றின கடுக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சமவிகிதத்தில் சேர்த்து  அரைக்கவும். அரைத்த விழுதை வடிகட்டி, அதைவிட மூன்று மடங்கு அதிகமான அளவுக்கு தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும். இதை தினமும் கேசத்தில்  தடவிவந்தால், முடி உதிர்வுக்கு ஒரு குட்பை சொல்லலாம்.
 
நெல்லிக்காய் சாறு தயாரித்து, அதைப் பருகுவதன் மூலம் ரத்தசோகை, குடல் புண், சர்க்கரைநோய், கண் நோய்களிலிருந்து விடுபடலாம். உதடு வெடிப்பைப் போக்க, பாலாடையுடன் நெல்லிக்காய் சாற்றைக் கலந்து தடவலாம்.
 
நெல்லிக்காய் சாறு செய்முறை: தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 10, தேன் - தேவையான அளவு, இளநீர் - 1. செய்முறை: கொட்டை நீக்கப்பட்ட நெல்லிகனிகளை தண்ணீர்விட்டு நன்கு அரைத்து வடிகட்டி கிடைக்கும் சாற்றுடன் தேன் மற்றும் இளநீர் சேர்த்துப் பருகலாம். 
 
நரை முடி: நெல்லிக்காய் சாறு மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு, அதில் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்த கலவையை இரவில்  கூந்தலில் தேய்த்து, காலையில் கழுவிவிடலாம். விரைவில் கூந்தல் கறுப்பாக மாறும்.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments