Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத்திரிக்காயை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் !!

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (18:21 IST)
கத்தரிக்காயில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. கத்தரிக்காயில் உடலுக்கு ஊட்டம் தருகின்ற அனைத்து விட்டமின் சத்துக்களும் நிறைந்துள்ளன.


கத்திரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. எனவே கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

கத்திரிக்காய் அதிகமாக உணவில் சேர்த்து வரும் பொழுது இதய தசைகள் வலுப்பெற்று, இரத்த ஓட்டமானது இதயத்திற்கு சீராக செல்கிறது. கத்தரிக்காயில் வைட்டமின் பி 6, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட் உள்ளன, இதனால் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.

எலும்புகள் மற்றும் பற்கள் உருவாவதற்கு  தேவையான கால்சியம் உள்ளன. கத்தரிக்காயில் கொழுப்பு  மிகக் குறைவாக உள்ளது. ஆனால்  நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்து இரைப்பை சாறுகளின் சுரப்பைத் தூண்டுகிறது, இது நம் உடலுக்கு உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் உதவுகிறது.

வறுத்த கத்தரிக்காய் சுவை நன்றாக இருக்கும் ஆனால் அவை நிறைய எண்ணெய்யை உறிஞ்சிவிடும். எனவே வேகவைத்த கத்தரிக்காயை உட்கொள்வது பயன் தரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெருஞ்சீரகத்தின் நன்மைகள்: சாப்பிட்ட பிறகு ஏன் உட்கொள்ள வேண்டும்?

அதிக உப்பு உட்கொள்வது உடல்நலத்திற்கு ஆபத்தானது.. சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை..!

ஆரோக்கியத்தின் அற்புதம்: தமிழர் பாரம்பரிய உணவான பழைய சோறு!

இரவு உணவுக்கு பின் ஏலக்காய்: கிடைக்கும் அற்புத ஆரோக்கிய நன்மைகள்!

காய்ச்சல், சளி, இருமல் குணமாக வீட்டில் தயாரிக்கப்படும் கஷாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments