அடிக்கடி தூதுவளை கீரையை உண்பதால் கிடைக்கும் பயன்கள் !!

Webdunia
தூதுவளை இலையை நிழலில் காயவைத்து பொடியாக்கி காலை, மாலை என இருவேளை பத்தியத்துடன் உண்டு வர இளைப்பு நீங்கி உடல் வலிமை பெறும். இருமல் நீங்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும். உடல் வலிமை பெறும்.

தூதுவளையை மைபோல் அரைத்து சின்ன வெங்காயம் சேர்த்து அடைபோல் செய்து சாப்பிட்டு வர தலையில் உள்ள கபம் குறையும். காது மந்தம், இருமல்,  நமைச்சல், பெரு வயிறு மந்தம் போன்றவைகளுக்கு தூதுவளை ஓரு அரு மருந்தாகும்.
 
தூதுவளை பழத்தை நிழலில் காயவைத்து பொடியாக்கி, தேன் கலந்து சாப்பிட்டால் மார்பு சளி, இருமல் நீங்கும். பாம்பின் விஷம் முறியும்.
 
தூதுவளை காயை சமைத்தோ அல்லது காயவைத்து வற்றலாக செய்து சாப்பிட்டு வந்தால் கண் நோய் நீங்கும். தூதுவாளை பூவை காயவைத்து பொடியாக்கி பாலில் கலந்து உண்டு வர உடல் பலம் பெறும்.
 
தூதுவளை இலையை குடிநீராக அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் வராது. தூதுவளையை வாரத்திற்கு ஒருமுறை அல்லது 2 முறை கீரையாக சமைத்து உண்டு வர ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
 
தூதுவளை கீரை அடிக்கடி சமைத்து உண்டு வர புற்றுநோய் ஏற்படாது. தொண்டை புற்று, கருப்பை புற்று, வாய்ப் புற்று ஆகியவைகளுக்கு தூதுவளை ஓரு  அருமருந்தாகும்.
 
தூதுவளை இலை 15 கிராம் எடுத்து அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து 200 மி.லி வந்தவுடன் இறக்கி 30 மி.லி முதல் 40 மி.லி வரை மூன்று வேளை இந்த கஷாயத்தை குடிக்க இருமல் மற்றும் காய்ச்சல் குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உருளைக்கிழங்கு: நன்மையா, தீமையா? - அறிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்

வாழைத்தண்டு உணவில் சேர்ப்பதால் ஏற்படும் அற்புதமான நன்மைகள்..!

உடல் எடையை எளிய முறையில் குறைக்க அற்புதமான 5 வழிகள்!

ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் பாலக் கீரை! அதிசய பலன்கள் தரும் எளிய சமையல் முறை

முட்டையின் வெள்ளைக்கருவில் இருக்கும் வைட்டமின்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments