Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் !!

Webdunia
சாத்துக்குடி பழத்தில் வைட்டமின் சி, இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, புரதம், கால்சியம், நார்ச்சத்து ஆகியவை உள்ளது. சாத்துக்குடியை பழமாகவோ, ஜூஸாகவோ சாப்பிடுவது உடலுக்கு அதிக நன்மையை அளிக்கிறது.

சாத்துக்குடி அனைத்து பருவ காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு அறிய பழமாகும்.  உடல் சோர்வை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை தருவதில் சாத்துக்குடி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பிறந்த 6 மாத குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய ஒரு சிறந்த பழமாகும்.
 
உடல் சோர்வடையும் நேரத்தில் சாத்துக்குடி ஜூஸினை குடித்தால் உடலில் புது உற்ச்சாகம் ஏற்படும். சாத்துக்குடி சாப்பிடுவதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
 
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் உடலில் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் தான் நோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க செல்பவர்கள் சாத்துக்குடி பழத்தை வாங்கி செல்வது வழக்கமாக உள்ளது.
 
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை உணவிற்கு பதிலாக சாத்துக்குடி ஜுஸ் குடித்து வந்தால் உடல் எடை வெகுவாக குறைந்து உடல் ஆரோக்கியமடையும். உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்கள் சாத்துக்குடி ஜூஸினை அடிக்கடி எடுத்துக்கொண்டு வந்தால் நீர்ச்சத்து அதிகரித்து உடல் புத்துணர்வுடன் காணப்படும்.
 
நீர்க்கடுப்பு பாதிப்பு உள்ளவர்கள் சாத்துக்குடி பழத்தினை சாப்பிட்டு வர நீர்க்கடுப்பு சரியாகிவிடும். உடல் சூட்டினால் ஏற்படும் பாதிப்பை சரி செய்ய அடிக்கடி சாத்துக்குடி பழ ஜூஸினை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நன்மை தரும்.
 
மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் எளிதில் செரிமானம் அடைந்து உடல் புத்துணர்வு பெரும். மலச்சிக்கல் பாதிப்பு உள்ளவர்கள் சாத்துக்குடியை அதிக அளவில் சாப்பிட்டு வர மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படாது.
 
சாத்துக்குடியை அதிக அளவில் சாப்பிடுவதால் முகம் பொலிவடைந்து முகம் பளிச்சிடும். சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் அதில் உள்ள சத்துக்கள் எலும்பு தேய்மானத்தை தடுத்து, எலும்புக்கு வலு சேர்க்க உதவுகிறது. சாத்துக்குடி ஜீரண சக்தியை அதிகரித்து, பசி உணர்வை தூண்டுகிறது.
 
சாத்துக்குடியில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரக பையில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகத் தொற்று நோய் உருவாகாமல் தடுக்கும். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பயன்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவில் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

வல்லாரை கீரை சாப்பிடிவதால் கிடைக்கும் பலன்கள்..!

ஈயின் மூளையில் என்ன இருக்கிறது? அதை கொல்வது ஏன் கடினமாக உள்ளது?

வாழைக்காய் உணவில் சேர்ப்பதால் உடலுக்கு நல்லதா? கெட்டதா?

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments