முட்டைக்கோஸ் வேகவைத்த நீர் எதற்கெல்லாம் பயன்படுகிறது...?

Webdunia
பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸில், உடலுக்கு ஊட்டம் தரும் வகையில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் மினரல்ஸ் நிறைந்துள்ளன. இதிலுள்ள வைட்டமின் ஏ கண் பார்வை தெளிவாக தெரியவும், ஊட்டச்சத்துக்கள் சரும வறட்சி, தலைமுடி உதிர்வு,  உடல் சூடு, தொற்று நோய்கள் போன்றவற்றையும் குணப்படுத்த உதவுகின்றன.
இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு. உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் கொழுப்பு நிறைந்த  உணவுகளை உண்பதே ஆகும். முட்டை கோஸ் ஜூஸில் குறைவான கலோரியே உள்ளதால் உடலில் அதிகபடியாக கொழுப்பும் சேராது.  இதனை குடிப்பதால் உள்ளுருப்புகளில் படிந்திருக்கும் டாக்ஸின்களை அழித்து எளிதாக உடல் எடையை குறைக்க உதவும்.
 
அல்சர் உள்ளவர்கள் முட்டைகோஸ் தண்ணீர் பருகி வருவதினால் விரைவில் குணமடைய முடியும். ஏனெனில் முட்டைகோஸில் இருக்கும்  விட்டமின் சி வயிற்றில் ஏற்படக்கூடிய அல்சரை குணப்படுத்தக்கூடியது.
 
புற்றுநோயால் பதிக்கபட்டவர்களுக்கு முட்டைகோஸ் ஜூஸ் மிகவும் நன்மையை தருகின்றன. இதற்கு காரணம் முட்டைகோஸ் ஜூஸில் அதிகப்படியான ஐசோசியனேட் இருப்பதால் இவை நுரையிரல்,வயிறு போன்ற இடங்களில் புற்றுநோய் பாதிப்பு உண்டாவதை தடுக்கின்றன.
 
சருமத்தில் ஏற்படக்கூடிய பரு, கரும்புள்ளி, பருக்கள் போன்றவைகளே. இத்தகைய சரும பிரச்சனைகளுக்கு முட்டைகோஸ் ஜூஸ் நல்ல  பலனை தருகின்றது.
முட்டைகோஸ் ஜூஸ் ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்து இருப்பதால் இவற்றை தொடர்ந்து குடித்து வருவதால் சரும  ஆரோக்கியத்தை பராமரித்து சரும பிரச்சனைகளில் இருந்து முழுமையாக தீர்வு பெறலாம்.
 
வயதான தோற்றம் வருவதை தடுத்து, இளமையாக இருக்க பல வழிகளை பின்பற்றி வருகின்றனர். அவர்கள் என்றும் இளமையுடன் இருக்க  முட்டைகோஸ் ஜூஸ் பெரிதும் உதவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் நாவல் பழங்கள்!

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments