Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறந்த மருத்துவ குணங்கள் கொண்ட தேங்காய் எண்ணெய்யின் நன்மைகள்...!!

Webdunia
தேங்காய் எண்ணெய்யை கேரள மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் பெரும்பாலும் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தியே உணவுகள் தயாரித்து வருகின்றனர். மேலும் உடம்பில் தேய்த்து குளிக்கவும் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
கேரளா பெண்களின் கூந்தல் கருமையுடன் அழகாக, அதிக நீளமாக வளர்ந்து காணப்படுவதற்கு முக்கிய காரணம் தேங்காய் எண்ணெய்யும் ஒரு காரணம். தேங்காய் எண்ணெயை சமையலில் சேர்த்தால் உடலில் கொழுப்பு சத்து அதிகமாகி மாரடைப்பு ஏற்படும் என்று பரவலாக ஒரு  கருத்து இருந்து வருகிறது. ஆனால் இது தவறான கருத்து. தேங்காய் எண்ணெயால் உடலுக்கு எந்த கெடுதலும் இல்லை என்று புதிய  ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
 
தேங்காய் கலந்து தயாரித்த உணவும், தேங்காய் எண்ணெயில் தயாரித்த உணவும் சீக்கிரம் செரிமானம் ஆகும். அதோடு ரத்தத்தில் உள்ள  கொலஸ்ட்ரால் கரைந்துவிடும். சூரியகாந்தி, பாமாயில் இவற்றில் சமைத்த உணவுகளில் உள்ள கொலஸ்ட்ரால் உணவில் கரைக்க படாமல்  உருளையாக தென்படும். அது ரத்தத்துடன் கலக்கும் போது, ரத்தநாளம் அடைய வாய்ப்புள்ளது. இதனால் இதய நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆனால் தேங்காய் எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்துவதால் இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும்.
 
தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வரும் நபர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் இந்த எண்ணெய்யை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடு வருவதன் மூலம், வயிறு மற்றும் குடல்களில்  ஏற்பட்டும் அல்சர், குடல்களில் தங்கியிருக்கும் நுண்ணுயிரிகள், நச்சுக்கள், மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்ன சின்ன நோய்களுக்க்கு வீட்டிலேயே தீர்வு.. சில பாரம்பரிய குறிப்புகள் இதோ..!

இரத்த நாள அடைப்புகளை நீக்கும் ஆஞ்சியோ சிகிச்சை: ஒரு தெளிவான விளக்கம்..!

குறட்டை அதிகமாக வந்தால் அது இதய நோயின் அறிகுறியா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

இன்று உலக இதய தினம்.. இதயமும் அதன் பணிகளும்

வீட்டு எலிகளால் கல்லீரல் பாதிப்பு அபாயம்: சென்னை ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments