Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின்களை தரும் முளைக்கீரை !!

Webdunia
முளைக்கீரையை தொடர்ந்து சாப்பிடுவதால், சொறி, சிறங்கு முதலிய நோய்கள் குணமாகின்றன. இந்தக் கீரை வெப்ப சுரத்தைத் தணிக்கிறது.

முளைக்கீரையானது சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
மூளை கீரை கண் எரிச்சல், கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். இருமல், தொண்டைப்புண் போன்றவற்றையும் குணமாக்கும்.
 
முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் உடலுக்குப் போதிய அளவில்  கிடைக்கும்.
 
முளைக்கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தி, தூள் செய்து சாப்பிட்டால் பித்த நோய், மயக்கம், ரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்.
 
முளைக் கீரைச் சாற்றில் உளுந்தம் பருப்பை ஊறவைத்து அதை அரைத்துச் சாப்பிட்டால் நீர்க்கடுப்பு மறையும்.
 
முளைக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் குணமாகும்.
 
முளைகீரையில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளதால் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
 
முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் சொறி, சிரங்கு முதலிய தோல் நோய்கள் குணமாகும்.
 
முளைக் கீரையானது இளைத்த உடல் தேறவும், தேகத்திற்கு வலு கிடைக்கவும் உதவுகிறது..
 
முளைக்கீரையில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சீராக்குவதுடன், கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு உதவும் அத்தியாவசிய உணவுகள்: ஒரு விரிவான வழிகாட்டி!

மருக்களை போக்க சில எளிய வீட்டு வைத்தியங்கள்: நிரந்தர தீர்வுக்கான வழி!

அடிக்கடி வரும் ஏப்பம்: காரணங்களும், தடுக்கும் வழிகளும்!

தலைக்கு எண்ணெய் தேய்க்கும் முறை: நன்மைகளும், தவறான பழக்கங்களும்!

மருத்துவக் குணங்கள் நிறைந்த நாவல் மரம்: ஒரு முழுமையான பார்வை

அடுத்த கட்டுரையில்
Show comments