Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவில் அடிக்கடி முடக்கத்தான் கீரையை சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் பயன்கள் !!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (09:54 IST)
முடக்கத்தான் கீரை கசப்புச்சுவை உடையது. இதனை அடையாகத் தட்டி உண்பது வழக்கம். பொதுவாக தோசை மாவுடன் கலந்து தோசை சுட்டுச் சாப்பிடுவார்கள்.


காலையில் எழுந்ததும் சிலருக்கு பாதம், கை, இடுப்பு, கால் மூட்டுகளில் வலி அதிகமாக இருக்கும். மூட்டுகளில் வலி தொடர்ந்து இருப்பவர்கள், உணவில் அடிக்கடி முடக்கத்தான் கீரையை சேர்த்து கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.

முடக்கத்தான் கீரையை மிக்ஸியில் மைய அரைத்து தோசை மாவில் கலந்து தோசையாக செய்து சாப்பிட்டால் சிறிதும் கசப்பு தெரியாது. மாத்திரைகளால் மூட்டுவலியின் வீரியம் தற்காலிகமாக குறையும். ஆனால் முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் வலியை நிரந்தரமாக குறைக்கலாம். ​

மூட்டு வலி, எலும்பு தேய்மானம் இருப்பவர்கள் வாரத்துக்கு மூன்று முறை முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்து கொண்டால் மூட்டுவலி படிப்படியாக குறையும்.

முடக்கத்தான் கீரை பச்சிலை மருந்துகளில் மிகச்சிறந்த பச்சிலையாக விளங்குகிறது. இலையும், வேரும் இரண்டுமே வைத்தியத்துக்கு உதவுகின்றன. முடக்கத்தான் கீரையை அரைத்துக் காலையில் நெல்லிக்காய் அளவு உண்ணலாம். சொரிசிரங்கு, கரப்பான் போன்ற நோய்கள் குணமாகும்.

இதன் குடிநீர் குடலைச் சுத்தமாக்கி மலச்சிக்கலைப் போக்கும் ஆற்றல் பெற்றது. முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு அரைத்து சிறு கருப்பட்டி கூட்டித் தின்ன குடலிறக்க நோய் குணமாகும்.

முடக்கத்தான் கீரையின் துவையலை தொடர்ந்து உணவில் எடுத்து கொண்டால் மலச்சிக்கல், மூல நோய், பாதவாதம், கரப்பான், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரத்த நாள அடைப்புகளை நீக்கும் ஆஞ்சியோ சிகிச்சை: ஒரு தெளிவான விளக்கம்..!

குறட்டை அதிகமாக வந்தால் அது இதய நோயின் அறிகுறியா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

இன்று உலக இதய தினம்.. இதயமும் அதன் பணிகளும்

வீட்டு எலிகளால் கல்லீரல் பாதிப்பு அபாயம்: சென்னை ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

உடற்பயிற்சியும் இதய ஆரோக்கியமும்: இதய நோய்களைத் தடுப்பதற்கான வழிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments