Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதினாவை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் !!

Webdunia
புதினா சட்னி, புதினா ஜூஸ், புதினா டீ, புதினா கசாயம், புதினா சூப் என எவ்வாறு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதினாவை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். இதில் எலுமிச்சை ஜுஸ் கலந்து குடித்து வந்தால் பித்தம் குறையும்.
 
புதினா அதிக அளவு கொழுப்பை குறைக்கிறது. எனவே, உடல் எடையை குறைப்பதற்கு புதினா பெரிதும் உதவுகிறது.
 
கற்பிணி பெண்களுக்கு குமட்டல் மற்றும் வாந்தி இருக்கும். இதில் இருந்து விடுபட புதினாவை துவையல் செய்து சாப்பிட்டாலே போதுமானது.
 
புதினாவோடு இஞ்சி சாறு, எலுமிச்சை ஜுஸ், உப்பு போன்றவற்றோடு சிறிது தண்ணீர் சேர்த்துக் குடித்து வந்தால் செரிமான பிரச்சனை குணமாகும்.
 
பல் மற்றும் வாய் பிரச்சனைகளை குணப்படுத்த புதினா பெரிதும் உதவுகிறது. புதினாவை வாயில் போட்டு மென்றால் போதுமானது, வாய் பிரச்சனைகளைக் குணமாக்கும்.
 
உடல் எடையைக் குறைக்க புதினா அதிக அளவு பயன்படுகிறது. புதினாவை அரைத்து போஸ்ட் செய்து பற்களில் தேய்த்து பல் துலக்கலாம்.
 
வீசிங் பிரச்சனை உள்ளவர்கள் புதினாவை உணவில் சேர்த்துக் கொள்வது அதிக நன்மையைக் கொடுக்கும்.
 
புதினா டீ குடித்தாலே வரட்டு இருமல் குணமாகும். எனவே, வரட்டு இருமல் இருப்பவர்கள் புதினாவை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும், சிறுநீரகப் பிரச்சனை மற்றும் முகப்பரு பிரச்சனை ஆகியவற்றையும் குணப்படுத்த பெரிதும் உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: சுவையான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

'சைவ ஆட்டுக்கால்' முடவாட்டுக்கால் கிழங்கு: மருத்துவப் பயன்களும், எச்சரிக்கையும்

தேங்காய் எண்ணெயும் அரிசியும்: சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த புதிய வழி

நமது உணவின் இரகசியம்: புறக்கணிக்கப்படும் கறிவேப்பிலையின் முக்கியத்துவம்

உடல் பருமன் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை: பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

அடுத்த கட்டுரையில்
Show comments