Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவில் குடைமிளகாயை சேர்ப்பதினால் கிடைக்கும் பலன்கள் !!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (17:31 IST)
குடைமிளகாய் மஞ்சள், பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு வண்ணங்களின் வகைகளில் வருகிறது.


குடைமிளகாயில் கொழுப்புச் சத்து, சோடியம் குறைவாக இருப்பதால் உணவில் அடிக்கடி குடைமிளகாயை சேர்த்துக் கொள்ளலாம்.

குடைமிளகாயில் உள்ள “வைட்டமின் சி” கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் குடைமிளகாயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் சர்க்கரை அளவு குறையும். இளமையில் கண் தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்க குடைமிளகாய் உதவுகிறது.

குடைமிளகாயை உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது சைனஸ், சளி மற்றும் தொண்டை வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது.

குடைமிளகாய் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இதில் இருக்கிறது. குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது.

குடைமிளகாய் உங்களுக்கு ஆற்றலைத் தருகிறது மற்றும் உடலை சுறுசுறுப்பாக்குகிறது. குடைமிளகாய் வயிறு உப்புசம், வாயு தொல்லை பிரச்சனையை போக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments