Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் பீட்ரூட்.....!

Webdunia
பீட்ரூட்டை ஆண்கள் சாப்பிடுவதால், பாலியல் பிரச்சனைகளுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளுக்கு இணையாக பீட்ரூட் செயல்படுவது தெரிய வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது.
பீட்ரூட்டை சாப்பிடும் போது, அதில் உள்ள நைட்ரேட்டுகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களால் நைட்ரைட்டுகளாக மாற்றமடைகிறது. பீட்ரூட்டை நன்கு மென்று  விழுங்கும் போது, வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களால் அது நைட்ரிக் ஆக்ஸைடாக மாறி, இரத்த நாளங்களை விரியச் செய்து, உடல் முழுவதும் இரத்த  ஓட்டத்தை மேம்படுத்தும்.
 
ஆண்கள் தொடர்ந்து பீட்ரூட் சாப்பிட்டு வருவதன் மூலம், உடல் முழுவதும், குறிப்பாக பிறப்புறுப்புகளில் உள்ள இரத்த நாளங்கள் விரிந்து, இரத்த ஓட்டம்  அதிகரித்து, பாலியல் பிரச்சனைகள் நீங்கி, படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட உதவும்.
தினமும் 500 கிராம் பீட்ரூட் சாப்பிட்டால், ஆறு மணிநேரத்திற்குள் இரத்த அழுத்தம் குறைந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பீட்ரூட்டை  நன்கு சுத்தமாக நீரில் கழுவி, தோல் நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி, சாலட்டுகளில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். அதனை துண்டுகளாக்கி, வேக வைத்து, பின் அதில்  சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து உட்கொண்டு வர, உடலில் நைட்ரேட்டுகளின் அளவு அதிகரிப்பதோடு, இரத்தணுக்களின் அளவும் அதிகரிக்கும்.
 
பீட்ரூட்டை ஜூஸ் செய்து குடிக்கும் போது, அதில் சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பீட்-ருட் ஜூஸ் செய்வதற்கு 2 சிறிய பீட்ரூட்டை எடுத்து,  நன்கு கழுவி, தோல் நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து, வடிகட்டி அப்படியே குடிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்