Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துளசியின் அற்புத மருத்துவ பலன்கள்!!

Webdunia
தினந்தோறும் காலையில் மூன்று திளசி இலை, மூன்று மிளகு இவைகளை தண்ணீர் விட்டு அரைத்து குடித்து வந்தால் வியாதி என்ற பயமே  ஏற்படாது.
காலை மாலை மூன்று துளசி இலைகளை உட்கொண்டு வந்தால் உடல் பிரகாசிக்கும்.
 
தோல் சம்பந்தமான நோய் உடையவர்கள் அதாவது சொரி, சிறங்கு, படை, நமைச்சல் முதலியவைகளுக்கு துளசியை உண்டும், மேற்பூச்சாக  தடவிவந்தால் நாளடைவில் மறைந்துவிடும்.
 
அம்மை போட்டு காய்ச்சல் வந்தால், துளசி, இஞ்சி, ஓமம் மூன்றையும் சமமாக சேர்த்து அரைத்துத் தடவுவதால் காய்ச்சல் நீங்கி, அம்மையும்  சீக்கிரம் மறைந்துவிடும்.
 
குழந்தைகளுக்குப் பெரியம்மை வந்தால் துளசிச் சாற்றை மேலே தடவினால் சீக்கிரம் மறைந்துவிடும்.
குழந்தைகள் வாந்தியெடுத்தால், துளசிச் சாறுடன் சிறிதளவு தேன் கலந்து கொடுத்தால் வாந்தி நிற்கும்.
 
வாந்தி, பேதியும் ஏற்பட்டால் அவற்றிற்கு துளசி விதையை அரைத்துப் பசும்பாலில் கலந்து கொடுக்கலாம்.
 
தேனுடன் உப்பு, துளசிச் சாற்றையும் கலந்து சாப்பிட காது சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
 
காதில் வலி, குத்தல் ஏற்பட்டால் இரண்டு துளி துளசிச் சாற்றை காதில் விடவும்.

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments