Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அல்சர் பிரச்சனையை போக்க உதவும் அற்புதமான மருத்துவ குறிப்புகள் !!

Webdunia
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவதிப்படும் பிரச்னைகளில் ஒன்று தான் அல்சர் புண். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாதே இதற்கு காரணமாகும்.

சரியான நேரத்தில் சாப்பிடாத போது, இரைப்பையில் அமிலம் சுரந்து புண்களை உண்டாக்குகிறது. இதனால் கடுமையான வயிற்றுவலி ஏற்படும். தொடக்கத்திலேயே  கவனிக்கவில்லை என்றால் கடுமையான பின்விளைவுகளையும் சந்திக்க நேரிடும்.
 
இப்பிரச்சனையை மருந்துகளை உட்கொள்வதை விட மிக எளிமையான வீட்டு வைத்தியத்தின் மூலம் சரிசெய்யலாம். தினமும் ஆப்பிள் ஜூஸ், அகத்திக் கீரை சாறு, பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தாலும் அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
 
நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து குடித்து வந்தாலும் நிவாரணம் கிடைக்கும். தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனை ஊற்றி குடித்தாலும் அல்சரால் ஏற்படும் வயிற்று எரிச்சல் பிரச்சனை சரியாகும்.
 
பாக்டீரியா எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ள வெள்ளைப்பூண்டை தேன் கலந்து சாப்பிட்டாலும் அல்சர் சரியாகும். வெந்தயம் கலந்த டீ, கற்றாழை ஜூஸ் இதற்கு ஒரு நல்ல தீர்வாகும், குறிப்பாக அதிகளவு தண்ணீர் பருகுவதே சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.
 
தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்றுப் புண் சரியாகும். முட்டைகோஸ், பாகற்காய் மற்றும் முருங்கைகாயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் அல்சர் சரியாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண் பார்வை இல்லாத பெற்றொருக்கு பிறக்கும் குழந்தைக்கு கண் பார்வை பாதிக்குமா?

சர்க்கரை நோயாளிகளுக்கு வியர்க்குரு பிரச்சனை அதிகம் வருமா?

ஞாபக மறதி நோய் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும்?

அதிகரித்து வரும் பெருங்குடல் புற்றுநோய்! வராமல் தடுப்பது எப்படி?

குக்கரில் சாதம் சமைத்து சாப்பிட்டால் உடல்நலத்திற்கு தீங்கா? அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments