பல்வேறு நோய்களுக்கும் அற்புத பலன் தரும் ஆவாரம் பூ !!

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (09:44 IST)
ஆவாரம் பூக்களை போட்டு வேகவைத்த தண்ணீரை காய்ச்சல் ஏற்பட்ட காலங்களில் அவ்வப்போது பருகி வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காய்ச்சல் வெகு விரைவில் நீங்கும்.


சிறுநீரக தோற்று நோய் உடலில் இருந்து அவ்வளவு சுலபத்தில் நீங்காது. ஆனால் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவாரம் பூவிலிருந்து செய்யப்படும் கஷாயத்தை அருந்தி வந்தால் சிறுநீரக தொற்று நோய்கள் விரைவில் நீங்கும்.

ஆவாரம் பூ இயற்கையிலேயே கிருமி நாசினி தன்மை அதிகம் கொண்டது. இப்பூக்களை அவ்வப்போது பக்குவப்படுத்தி சாப்பிட்டு வருவதால் உடலில் தொற்று கிருமிகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்த ஆவாரம் பூ சிறந்த இயற்கை மருந்தாக இருக்கிறது.

ஆவாரம் பூக்களை கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது நிற்கும். அடிவயிற்றில் ஏற்படும் வலி குறையும். அதோடு கருப்பையில் இருக்கும் நட்சுக்களையும் இது போக்கும்.

வயிறு சம்மந்தமான நோய்களும் குணமாகும். ஆவாரம் பூ தேநீர் பருகுவதால் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களும் நீங்கி, கல்லீரல் பலப்படும்.

ஆவாரம் பூக்களை பறித்து காயவைத்து, பின்பு சிறிது சுத்தமான நீரை அடுப்பில் வைத்து, அதில் நிழலில் உலர்த்தப்பட்ட்ட ஆவாரம் பூக்களை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி பனங்கற்கண்டை சிறிதளவு சேர்த்தால் ஆவாரம் பூ தேநீர் தயார். இத் தேநீரை தினமும் நீரிழிவு நோயாளிகள் பருகி வந்தால் நீரிழவு நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தைகளுக்கு இருமல் மருந்து அவசியமில்லை: மருத்துவர்களின் எச்சரிக்கை

மார்பக சீரமைப்பு தினத்தில் (BRA Day 2025) மார்பகப் புற்றுநோயை வென்ற 100-க்கும் மேற்பட்டோரை ஒருங்கிணைத்த சென்னை மார்பக மையம்

பற்களை பாதுகாக்க எளிய வழிகள்: நீண்ட கால ஆரோக்கியத்திற்கான கையேடு

பப்பாளியின் அரிய மருத்துவப் பயன்கள்: செரிமானம் முதல் புற்றுநோய் வரை!

எம்ஜிஎம் மலர் மருத்துவமனையில் பக்கவாதத்திற்கான அதிவேக சிகிச்சை பதில்வினைக் குழு அறிமுகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments