பனங்கிழங்கில் இத்தனை அற்புத பயன்கள் உள்ளதா....?

Webdunia
பனைமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய நுங்கு, பதநீர், கிழங்கு மற்றும் பழம் போன்றவை அதிக சுவையுடன் மனிதர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், நோய் தீர்க்கும் மருந்தாகவும் செயல்படக்கூடியது.
 


பனை மரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு அதனை வெட்டாமல் மரத்திலேயே விட்டுவிட்டால் அந்த நுங்கு நன்றாக பழுத்து பனம்பழமாகி விடும். இந்த பனம்  பழத்தினை எடுத்து வெட்டி நிலத்தில் குழி தோண்டி அதில் புதைத்து வளர்த்து வந்தால் கிடைப்பதுதான் பனங்கிழங்கு.
 
மலக்கழிவை வெளியேற்ற இயலாமல் அதாவது மலச்சிக்கலால் அவதியுறுபவர்கள் வெயிலில் காய வைத்த பனங்கிழங்கை (பச்சையாக) எடுத்து, தேவையான  அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து ஈரமாவு ஆக அரைத்து தோசை சுட்டு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும்.
 
பனங்கிழங்கை மஞ்சளுடன் சேர்த்து வேகவைத்து, வெயிலில் காய வைத்து, பின் அதை அரைத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து அதிகமாகும்.
 
பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை மற்றும் உடல் உள் உறுப்புகள் வலிமையாகும். சர்க்கரை நோய், வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு பிரச்னை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளை பூண்டில் இருக்கும் அற்புத மருத்துவ குணங்கள்..!

வாரத்திற்கு ஒரு நாளாவது கோவைக்காய் உணவில் சேருங்கள்.. ஏராளமான பலன்கள்..!

தினமும் கோதுமை உணவை எடுத்து கொள்வதால் ஏற்படும் நலன்கள்..!

வாழைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு பிரச்சனை ஏற்படுமா?

தினசரி உணவில் பருப்பு வகைகள் சேர்ப்பது உடலுக்கு நன்மையா?

அடுத்த கட்டுரையில்
Show comments