Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவி பிடிப்பதால் இத்தனை நன்மைகள் உள்ளதா...?

Webdunia
சூடான தண்ணீரில் சேர்த்து ஆவி பிடிப்பதால் நம்முடைய நுரையீரலில் இருக்கக்கூடிய கிருமிகள் வெளியேறிவிடும். மஞ்சள், மிளகு, எலுமிச்சை, இஞ்சி, துளசி  இதையெல்லாம் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம்.

ஆவி பிடிக்கும் போது அதிக நேரம் ஆவி பிடிக்க கூடாது. உங்களால் சூடு தாங்க முடிந்த அளவில் ஆவி பிடியுங்கள். அதில் மூலிகைகளை சேர்த்தும் ஆவி பிடிக்கலாம். ஆயுர்வேதத்தில் இதை ‘ஸ்வேதனம்’ என்கின்றனர். நம் முன்னோர்கள் கையாண்ட பாட்டி வைத்திய முறை ஆவி பிடிப்பது.
 
கொதிக்கும் தண்ணீர் உள்ள பாத்திரத்தின் முன்பு தலை குனிந்து உட்கார்ந்து, போர்வையால் மூடிக்கொண்டு ஆவியை சுவாசித்தால் போதும். கட்டாயம் கண்களை மூடிக்கொள்ள வேண்டும்.
 
ஆவி பிடிப்பதால் சளி தொல்லையில் இருந்து தப்பிப்பதோடு, அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளோ பலப்பல. ஆவி பிடித்து நோய்களை விரட்டும் பழக்கம் கிராம  மக்களிடையே இன்னும் வழக்கத்தில் இருக்கிறது.
 
சுத்தமான நீரில் வேப்பிலை, துளசி, நொச்சி இலை போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆவி பிடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. தொல்லைப்படுத்தும் சளி,  இருமலை விரட்ட, ஆவி பிடித்தால் சுவாசம் தடையின்றி இருக்கும். 
 
ஆஸ்துமா, சைனஸ் நோயால் துன்பப்படுவோர் இம்முறையை பின்பற்றலாம். நீரில் எலுமிச்சை அல்லது மஞ்சள் பொடியை கலந்து ஆவி பிடித்தால் தலை பாரம்  நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments