Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மைகளா...?

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (11:20 IST)
குங்குமப்பூவை பெண் கருவுற்றிருக்கும் போது உணவில் சேர்த்து கொண்டால் பிறக்கும் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்ற நம்பிக்கை உண்டு. குங்குமப்பூவை சாப்பிட்டு வந்தால் இதில் இருக்கும் சத்துக்கள் கருவிழி தசைகளை வலுவடைய செய்து, விழித்திரை சேதமடையாமல் தடுக்கிறது. வயதானவர்களின் பார்க்கும் திறனை அதிகரிப்பதில் குங்குமப்பூ முக்கியப்பங்கு வகிக்கிறது.


குங்குமப்பூ பார்வைத்திறனை பாதுகாப்பதோடு, விழித்திரையை சீரமைக்கவும் உதவும். குங்குமப்பூவில் ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வளமான அளவில் இருப்பதால், இவை செரிமானத்தை ஊக்குவிக்கிறது.

குங்குமப்பூ பாலுணர்வை தூண்டக்கூடியது. விறைப்புத்தன்மை தொடர்பான பிரச்சினை உள்ள ஆண்கள் குங்குமப்பூவை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இது ஆணின் இனப்பெருக்க மண்டலத்தை மேம்படுத்துகிறது. குங்குமப்பூவில் உள்ள க்ரோசின் படுக்கையில் ஆற்றலுடன் செயல்பட வைக்கக்கூடியது.

கர்ப்பமாக உள்ள பெண்கள் 5 மாதம் முதல் 9 மாதம் வரை குங்குமப்பூவை சேர்த்துகொள்ளலாம். குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் இரத்ததை சுத்திகரிக்கவும் உதவுகிறது. குங்குமப்பூ சாப்பிட்டால் இரத்த சோகை ஏற்படுவது குறையும்.

குங்குமப்பூவுடன் சிறிதளவு சந்தனம் மற்றும் 2 ஸ்பூன் பால் இவை மூன்றையும் கலக்கி முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரியான நேரத்தில் சரியான உணவுகள்.. உடல்நலனை மேம்படுத்த சில டிப்ஸ்..!

குழந்தைகளை மண்ணில் விளையாட விடுங்கள்.. ஆரோக்கிய டிப்ஸ்..!

ஏசியில் நீண்ட நேரம் இருந்தால் இளமையிலேயே வயதான தோற்றம் ஏற்படுமா? அதிர்ச்சி தகவல்..!

ஆரோக்கியத்தை கெடுக்கும் இன்றைய பழக்க வழக்கங்கள்.. முக்கிய தகவல்கள்

சிறுநீரில் வெள்ளை நிற நுரை இருந்தால் ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments