Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேங்காய் பூ சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் உள்ளதா...!!

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (18:21 IST)
தேங்காய் பூவில் இருக்கின்ற அதிக அளவிலான ஊட்ட சத்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக கூட்டிவிடும். அதன்மூலம் பருவகால நோய் தொற்றுக்களைத் தவிர்க்க முடியும்.


தேங்காய்ப்பூவில் இன்சுலின் சுரப்பைத் தூண்டும் சக்தி இருக்கிறது. அதனால் அடிக்கடி தேங்காய் பூவை சாப்பிடுவதினால், ரத்தத்தில் உள்ள அதிக அளவிலான சர்கரையைக் கட்டுப்படுத்கிறது.

இதயக் குழாய்களில் படிகிற கொழுப்புகள் மாரடைப்பையும் வேறு சில இதயம் தொடர்பான நோய் களையும் உண்டாக்குகிறது. இந்த கொழுப்பு தேங்கும் பிரச்னையை சரி செய்வதிலும் மிக சிறப்பாக தேங்காய்ப்பூ உதவுகிறது.

சருமத்தை மிக இளமையாகவும், பொலிவுடனும் சருமச்சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருப்பதில் மிக முக்கிய பங்கு தேங்காய்ப்பூவுக்கு உண்டு. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் இளமையைத் தக்க வைத்திருக்க உதவுகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் நேரம் தவிர வெள்ளைப்படுதல் இருப்பதால், இந்த தேங்காய்ப்பூவை உட்கொள்வதால் சீர் செய்ய உதவுகிறது. அதுமட்டுமின்றி அதிக நாள் மாதவிடாய் ரத்தப்போக்கை சரி செய்ய தேங்காய்ப்பூவை உபயோகிக்கலாம்.

இளநீர் மட்டுமின்றி தேங்காய்ப்பூவுக்கும் உடற்சூட்டை தணிக்கும் தன்மை உண்டு. உடற்சூட்டினால் ஏற் படும் மூக்கிலிருந்து ரத்தம் கசிவதையும் தேங்காய்ப்பூ தடுக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டாசு வெடிக்கும்போது விபத்து ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன?

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுமா?

தீவிர ஸ்ட்ரோக் / பக்கவாத பாதிப்புக்கான சிகிச்சைக்கு 24/7 கேத் லேப் – ஐ தொடங்கும் ரேலா மருத்துவமனை

பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

பால், தேன் மற்றும் இனிப்புகளில் கலப்படத்தை வீட்டிலேயே எளிதாக கண்டுபிடிப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments