Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்வேறு சரும பிரச்சனைகளில் இருந்து தீர்வு அளிக்கும் ஆப்ரிகாட் !!

Webdunia
கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, சி உள்ளிட்ட சத்துக்கள் அதில் நிறைவாக உள்ளன. அதில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளதால், ரத்த அணுக்கள் உற்பத்திக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது. ரத்த சோகையை வராமல் தடுக்கும்.

ரத்த சோகை வந்தவர்களுக்கு அருமருந்தாகவும் ஆப்ரிகாட் இருக்கிறது. எனவே, பெண்கள் மாதவிலக்கு நேரத்தில் இந்தப் பழத்தை எடுத்துக்கொள்வது பெரிதும்  பயனளிக்கும்.
 
குடலில் தேவையற்ற பொருட்கள் தங்குவதை வெளியேற்றி செரிமான மண்டலத்தைத் தூய்மைப்படுத்துகிறது. காய்ச்சல், தீராத தாகம் உள்ளவர்களுக்கு இந்தப் பழத்தை தண்ணீரில் கலந்து சிறிது தேன் கலந்து கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
ஆப்ரிகாட் பழத்தை சருமத்தில் வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தலாம். சூரிய கதிர்வீச்சால் சருமம் பாதிக்கப்படுவதில் இருந்து இது பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு சருமப் பிரச்சனைகளில் இருந்து தீர்வு அளிக்கிறது. இதில் அதிக அளவில் வைட்டமின் ஏ. உள்ளதால், நல்ல கூர்மையான பார்வைக்கு உதவியாக இருக்கிறது. மேலும், மிகச்சிறந்த ஆண்டி ஆக்சிடன்டாக செயல்பட்டு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
 
இந்தப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய நோய்களுக்கான வாய்ப்பு குறைகிறது. கெட்ட கொழுப்பு அளவு குறைகிறது. சில வகையான புற்றுநோய்  செல்களுக்கு எதிராகவும் இந்த பழம் செயல்படுகிறது. சாப்பிடுவதற்கு முன்பு 3 உலர் ஆப்ரிகாட் பழத்தைச் சாப்பிடுவது செரிமான மண்டலத்தைத் தூண்டி உணவு  நன்கு செரிமானம் ஆக உதவுகிறது.
 
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் இந்தப் பழத்தை எடுத்துக்கொள்ளலாம். கர்ப்பக்காலத்தில் இனிப்பு சாப்படுவதற்குப் பதில், உலர் ஆப்ரிகாட்  சாப்பிடுவது நல்ல சிற்றுண்டியாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

IIRSI 2025 மாநாடு: மொரிஷியஸ் அமைச்சர் அனில் குமார் பச்சூ, தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்!

மாதுளை தோலின் மகத்துவங்கள்: தூக்கி எறியும் முன் யோசியுங்கள்!

சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள்?

நீரிழிவு நோயாளிகளுக்கு நள்ளிரவில் பசி எடுத்தால் என்ன செய்ய வேண்டும்? பயனுள்ள டிப்ஸ்..!

நன்னாரி: உடலைக் காக்கும் அற்புத மூலிகை - அதன் மருத்துவப் பயன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments